கிச்சனில் இருக்கும்போது கவனம் தோழியரே.. எண்ணெய் தீ விபத்தை.. தடுப்பது எப்படி?

Feb 07, 2026,05:16 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


சமையலறையில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். சிறிய கவனக்குறைவு கூட பெரிய விபத்துக்கு வித்திட்டு விடும். நடந்த பின்னர் வருந்துவதை விட வருவதற்கு முன்பு தடுப்பதுதானே புத்திசாலித்தனம். 


சமையலறையில் இப்படியும் ஒரு விபத்து நடக்க வாய்ப்புண்டு என்பதை உணர்த்தும் கட்டுரைதான் இது. முழுமையாகப் படிங்க.. நீங்களும் கவனமா இருங்க.. உங்க வீட்டினரையும் கவனமாக இருக்கச் சொல்லுங்க.


Oil-ல அப்பளம் அல்லது பொரியல் செய்யும்போது ஸ்டவ்வை SIM-ல வைத்துவிட்டு வேறு ரூமுக்கு போய் விடாதீர்கள். அப்படிப் போனால், ஒரு நிமிஷத்துல oil full fire ஆகிடும்! எண்ணெய் முழுக்க கருகுற வரை burning நடந்தா — பெரிய விபத்துதான்!


இது நிறைய வீடுகளில் நடக்குற பொதுவான விபத்தாக உள்ளது. இதிலிருந்து நம்ம வீட்டையும் குடும்பத்தையும் பாதுகாக்க இந்த பாதுகாப்பு முறைகளை கையில் வச்சுக்கங்க.


எண்ணெய் தீப்பற்ற காரணங்கள்




ஸ்டவ்வை ஆன்ல வைத்து விட்டு ஹால் பாத்ரூம் என போய் விடுவது, எண்ணெய் அதிகமாக ஹீட் ஆகும்போது, எண்ணெய் மீது தண்ணீர் கொட்டுவது, வடைச் சட்டி அதிகமாக சூடாவது, குழந்தைகள், செல்லப் பிராணிகள் அருகில் வந்து ஏதாவது செய்வது என பல காரணங்கள் இதற்கு உள்ளன.


இதுபோல நடக்கும்போது பயப்படாதீர்கள். முதலில் நீங்க ஸ்டெடியா இருங்க. எண்ணெய் தீப்பிடித்துக் கொண்டதும் உடனே அதில் தண்ணீர் ஊத்தாதீங்க. ஊற்றினால் தீ இன்னும் பெரிதாக எரிய ஆரம்பிக்கும். சட்டியைத் தூக்கிப் போட்டு விடாதீர்கள். அருகிலும் போய் விடாதீர்கள்.


தீ பிடிச்சால் உடனே செய்ய வேண்டியது


ஸ்டவ் ஆப் பண்ணி விடுங்கள். சட்டிக்கு மேலே ஏதாவது ஒரு மூடியைப் போட்டு மூடி விடுங்கள். ஈரமான துணி இருந்தால் அதை மேல போடலாம். பேக்கிங் சோடா இருந்தால் அதை சட்டி மீது தூவி விடுங்கள். நல்ல தூரத்தில் இருந்து கொண்டு எதையும் செய்யுங்கள். தீ அணையும் வரை அருகில் போவதைத் தவிருங்கள்.


முன்கூட்டியே தடுக்கும் வழிகள் 


எண்ணெய் சூடாகும்போது தயவு செய்து அந்த இடத்தை விட்டுப் போய் விடாதீர்கள். சட்டியில் எண்ணெய் இருக்கும்போது பக்கத்தில் ஒரு மூடியை வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளை சமையல் செய்யும்போது அடுப்படிக்குள் அனுமதிக்காதீங்க.


ஸ்டவ் அருகே துணி கட்டாயம் இருக்க வேண்டும்.சமையல் செய்யும்போது போன் பார்த்தபடி இருப்பது, போனில் பேசிக் கொண்டிருப்பது போன்றவை கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.


எப்போதுமே வீட்டில் தீயணைக்கும் கருவியை வைத்திருப்பது புத்திசாலித்தனமானது. அதையும் வாங்கி வைங்க.. அவசர காலத்திற்கு அது உதவும்.


சின்ன negligence பெரிய disaster ஆகலாம். Cooking செய்யும்போது present-ஆ இருங்க. உங்கள் safety உங்கள் கையில் தான். ஒரு நிமிஷ கவனம் – ஒரு வாழ்க்கை பாதுகாப்பு!


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வட மாநிலங்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் இல்லை!

news

இடைத்தேர்தல் நடத்தக் கூடாது - தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு

news

கரூர் மக்களின் கண்ணீரால் தான் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்றார்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆவேச பேச்சு!

news

வைகை ஆற்றை மீட்க வேண்டும்: ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் வேண்டுகோள்!

news

உண்மையான துரோகிகள் இபிஎஸ் உடன் தான் இருக்கிறார்கள்: செங்கோட்டையன் கடும் தாக்கு

news

தவெக-வில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்

news

DMK: "கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வரமாட்டோம்" – திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி உறுதி!

news

"திமுகவால் ஆட்சியில் இல்லாமல் இருக்க முடியவில்லை!" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடும் கண்டனம்!

news

ஜூலை 12ல் 'We The Leaders' அமைப்பின் முதல் மாநாடு : அண்ணாமலை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்