லண்டன்: இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை மெட்டாவெர்ஸ் மூலம் கும்பல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெட்டாவெர்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இப்படி ஒரு புகார் வந்திருப்பது இதுவே முதல் முறை என்பதால் பரபர்பு ஏற்பட்டுள்ளது. மெட்டாவெர்ஸ் என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் (virtual reality) ஆகும்.
நாம் கற்பனை செய்யும் உலகில் சஞ்சரிக்க இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. சம்பந்தப்பட்ட சிறுமி, மெட்டாவெர்ஸ் மூலம் ஒரு கேமில் ஈடுபட்டிருந்தார். அப்போதுதான் அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை கும்பல் பலாத்காரம் செய்து விட்டதாக அவர் கூறியுள்ளார்.

அந்த சிறுமிக்கு உடலில் எந்தக் காயமும் ஏற்படவில்லை. அதேசமயம், நிஜமாக ஒரு கும்பல் பலாத்காரத்தின்போது எந்த மாதிரியான தாக்கத்தை உளவியல் ரீதியாக அனுபவிப்பார்களோ அதே தாக்கத்தை இந்த சிறுமியும் அனுபவித்திருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை இது ஒரு மெய்நிகர் பாலியல் குற்றம். காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு முதல் மெய்நிகர் virtual reality பாலியல் குற்றமாக கருதப்படுகிறது. தற்போது பாலியல் மெய்நிகர் குற்றத்திற்கு இதுவரை எந்த சட்டமும் உருவாக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாலியல் வன்முறையால் உணர்ச்சி மற்றும் உளவியல் தாக்கத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண் எந்த மாதிரியான கேம் விளையாடினார் என்ற தகவல் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
பாலியல் பலாத்காரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மெய்நிகர் பாலியல் குற்றங்களை தொடர வேண்டுமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார்.
இந்த பின்னணியில், மெட்டா வெர்ஸை உருவாக்கிய பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அது கூறுகையில், இத்தகைய குற்றங்களுக்கு எங்களது அப்ளிகேஷனில் இடம் இல்லை. ஒவ்வொரு பயனாளர்களுக்கும் தனிப்பட்ட எல்லை எனப்படும் பாதுகாப்பு உள்ளது. சம்பந்தமில்லாதவர்களை, அது உங்களிடமிருந்து விலக்கியே வைத்திருக்கும் என்று மெட்டா கூறியுள்ளது.
தொழில்நுட்பத்தால் சந்தோஷங்கள் அதிகம் கிடைத்தாலும்.. இதுபோன்ற சங்கடங்களும் தொற்றிக் கொண்டேதான் வருகின்றன. இந்த வழக்கின் விசாரணையின் போக்கை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}