சென்னை: பட்டப்பகலில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவன், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தான். சிறுவன் வீட்டில் இருக்கும் நேரம் பார்த்து இரண்டு பேர் சிறுவனை கொல்ல முயற்சித்துள்ளனர். அங்கிருந்து தப்பித்து அவன் ஓடியுள்ளான். ஆனாலும் விடாத அந்தக் கும்பல், ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்துள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரித்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக தனசேகர், மற்றும் வினோத் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த கொலைக்கு என்ன காரணம், சிறுவனை ஏன் கொன்றனர், பின்புலம் எதுவும் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்யத் துணிந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}