நேபாளத்தில் விபரீதம்.. 19 பயணிகளுடன் சென்ற விமானம்.. விழுந்து நொறுங்கி 18 பேர் பலி!

Jul 24, 2024,04:56 PM IST

காத்மாண்டு:   நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே 19 பேருடன் சென்ற பயணிகள் விமானம் ஓடுபாதையில் சறுக்கி விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகியுள்ளனர்.


நேபாளம் தலைநகர் காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து 19 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட்டது. காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. ஓடுதளத்தில் சென்ற போது ஓடுபாதை சறுக்கி விமானம் விபத்துக்குள்ளானது. ஒடுபாதையில் சறுக்கிய விமானம் சில மணி துளிகளில்  தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர  விபத்தில் 18 பேர் உடல் கருகி பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.




இந்த விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விமான விபத்தால் காத்மாண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது.இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் , தீயை அணைத்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில், 18 பேர்களின் உடல்  கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. விமானி மணிஷ் ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேபாளத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. நேபாள நாட்டில் விமான விபத்து என்பது அடிக்கடி நடைபெற்று வருகிறது. சராசரியாக ஆண்டுக்கு ஒரு விமான விபத்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்