ஒருத்தர் சுரேஷ் ராஜன், இன்னொருத்தர் மணி.. துரைங்க 2 பேரும்.. புல்லட் மட்டும்தான் திருடுவாங்களாம்!

May 02, 2023,10:50 AM IST
சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு ஐபிஎல் போட்டி பார்க்க வருவோரின் பைக்குகளைத் திருடியதாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விசேஷம் என்னவென்றால் இந்த இரண்டு பேரும் புல்லட்டுகளை மட்டும் குறி வைத்துத் திருடியுள்ளனர்.

இந்த இரண்டு திருடர்களிடமிருந்தும் திருடப்பட்ட 9 பைக்குகளைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ. 10 லட்சத்திற்கும் மேல் இருக்கும். 

தற்போது சென்னையில் ஐபிஎல் போட்டிகள் களை கட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்ட் என்பதால் இங்கு சென்னை அணி சம்பந்தப்பட்ட பல போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் கிரிக்கெட் பார்க்க வருவோர் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் அதிக அளவில் குவிகின்றனர். இதைப் பயன்படுத்தி திருடர்களும் கைவரிசை காட்ட ஆரம்பித்துள்ளனர்.



இப்படித்தான் சூளைமேட்டைச் சேர்ந்த கே.பாலசுந்தரம் என்பவர் ஞாயிற்றுக்கிழமை நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் இடையிலான போட்டியைப் பார்க்க வந்திருந்தார்.  ரயில்வே பார்டர் சாலையில் பைக்கை நிறுத்தி விட்டு மேட்ச் பார்க்கப் போய் விட்டார். மேட்ச் முடிந்து வந்து பார்த்தால் பைக்கைக் காணவில்லை. எல்லாப் பக்கத்திலும் தேடிப் பார்த்து விட்டு அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பாலசுந்தரம்.

இதுபோன்ற பல திருட்டுப் புகார்கள் வருவதாக போலீஸார் அவரிடம் தெரிவித்தனர். குறிப்பாக ராயல் என்பீல்ட் புல்லட்டுகளைக் குறி வைத்து ஒரு கும்பல்திருடி வருவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொடர் புகார்களைத் தொடர்ந்து போலீஸார் தனிப்படை அமைத்து திருடர்களைப் பிடிக்க களம் இறங்கினர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீஸார் நடத்திய விசாரணையில் 2 பேர் சிக்கினர். அவர்களது பெயர் திருவல்லிக்கேணி சுரேஷ்ராஜன் (55), பெரும்பாக்கம் மணி (40). இருவரும்தான் பைக் திருடர்கள் என்று தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர்.

கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வருவோரின் பைக்குகளை ஸ்டேடியத்திற்குள் நிறுத்த போதுமான பார்க்கிங் வசதி இல்லை. இதனால் சாலையோரங்களில்தான் பைக்குகளை நிறுத்த வேண்டியுள்ளதாக ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்