மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் நொறுங்கி விழுந்து விபத்து

Jan 28, 2023,12:01 PM IST
போபால் : மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு போர் விமானங்கள் பயிற்சியின் போது நொறுங்கி விழுந்து விபத்திற்குள்ளானது. 



மத்திய பிரதோசத்தின் குவாலியர் விமானப்படை மையத்தில் இருந்து புறப்பட்ட சுகோய் சு 30 மற்றும் மிரஜ் 2000 என்ற வகையை சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இந்த இரு விமானங்களும் எதிர்பாராத விதமாக இன்று காலை கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகின. விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த விபத்தில் விமானிகள் இருவரும் உயிர் தப்பி விட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் வேறு யாராவது உயிரிழந்திருக்கிறார்களா என்பது பற்றி விசாரைண நடத்தப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தின் மொரினா பகுதியில் நடைபெற்ற இந்த விபத்தை, அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதில் போர் விமானங்கள் வானில் இருந்து கீழே விழுந்து நொறுங்கும் காட்சிகள் பதிவாகி உள்ளன. 

விசாரைணயின் முடிவிலேயே உயிரிழப்புக்கள், விபத்திற்கான காரணம் போன்றவை தெரிய வரும் என சொல்லப்படுகிறது. மத்திய பிரதேச விமானப்படை பயிற்சி தளம் சார்பில் இந்த விபத்து குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்