டெஹ்ரான்: ஈரானில் ஒரு கடைக்குள் புகுந்த நபர், 2 பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் அந்தப் பெண்களின் தலையில் தயிரை ஊற்றி அநாகரீகமாக நடந்து கொண்டார்.
அந்த ஆசாமியைக் கைது செய்த போலீஸார், அந்த இரு பெண்களையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். பொது இடத்தில் தலைமுடியா ஹிஜாப் போட்டு மூடாமல் லூஸ் ஹேருடன் வந்ததால் அந்தப் பெண்களை போலீஸார் கைது செய்தனராம்.

அந்தக் கடைசியில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த கலாட்டா பதிவாகியுள்ளது. அந்தக் கடையில் இரண்டு பெண்கள் பொருட்கள் வாங்க நிற்கின்றனர். அப்போது ஒரு நபர் அங்கு வருகிறார். அந்தப் பெண்களுடன் ஏதோ கோபமாக பேசுகிறார். பின்னர் அருகில் இருந்த தயிர் டப்பாவை எடுத்து அதை இரண்டு பெண்களின் தலை மீதும் ஊற்றுகிறார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர். கூடவே அந்த பெண்களையும் கைது செய்தனர். லூஸ் ஹேருடன் வந்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனராம்.
ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். அணியாமல் பொது இடங்களில் நடமாடினால் கடும் தண்டனை கிடைக்கும். இதை எதிர்த்துத்தான் ஈரானில் பெண்கள் மிகப் பெரிய போராட்டங்களை மேற்கொண்டனர் என்பது நினைவிருக்கலாம்.
அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!
சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!
யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
{{comments.comment}}