பார்வையற்றோர் உலகப் போட்டியில் கோல்டு.. அசத்திய இந்திய "தங்கங்கள்".. மோடி ஹேப்பி!

Aug 27, 2023,09:59 AM IST
டெல்லி: சர்வதேச பார்வையற்றோர் உலக விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளனர் இந்திய வீராங்கனைகள். பிரதமர் நரந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பிர்மிங்காம் நகரில் சர்வதேச பார்வையற்றோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. அதில் மகளிர் கிரிக்கெட் அணி அட்டகாசமாக ஆடி தங்கம் வென்றுள்ளது.



முதல் முறையாக இந்த உலக விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் முதல் போட்டியிலேயே இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தி விட்டது. 20 ஓவர்கள்  கொண்ட போட்டி இது. ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் சந்தித்த  இந்தியா, அந்த அணியை 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் என்ற அளவில் நிறுத்தியது. பின்னர் தனது சேசிங்கை தொடங்கியது. மழை காரணமாக இந்திய அணிக்கான டார்கெட் 42 ஆக குறைக்கப்பட்டது. இதை 3.3 ஓவர்களிலேயே எடுத்து இந்தியா அபார வெற்றி பெற்று விட்டது.

இந்த வெற்றிக்கு பல்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்,  சர்வதேச பார்வையற்றோருக்கான உலக விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எனது பாராட்டுக்கள்.. மிகச் சிறந்த சாதனை இது. நமது விளையாட்டு வீராங்கனைகள் மிகச் சிறப்பான தகுதி உடையவர்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். உங்களால் இந்தியா பெருமை அடைந்தது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

கரூரில் விஜய் பேரணியின் போது நடந்தது இதுதான்.. வீடியோ போட்டு விளக்கிக் கூறிய அமுதா ஐஏஎஸ்!

news

கரூர் சம்பவத்திற்குப் பிறகு திமுக அரசு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி

news

தமிழகத்தில் இன்று முதல் அக்., 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

news

உறுதியாக எனது அரசியல் பயணம் தொடரும்... சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்: விஜய்!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது

news

விஜய்க்கு ஆதரவாக களமிறக்கப்படும் இன்ப்ளூயன்சர்கள்?.. ஆனால் இதெல்லாம் வேலைக்காகாதே!

news

மதுவிலக்கு தான் மகாத்மாவின் கொள்கை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

திருவண்ணாமலையில் ஆந்திரப் பெண் பலாத்காரம்.. எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்

news

கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாக தொடங்கிவிட்டது பாஜக: திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்