டெல்லி: 2024 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மேக்ரான் இந்த விழாவில் பங்கேற்றால், இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் 6வது பிரான்ஸ் தலைவராக அவர் உருவெடுப்பார். 1950ம் ஆண்டு இந்தியா குடியரசு நாடானது. அன்று முதல் ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படட்டு வருகிறது.
குடியரசு தின விழாவுக்கு வெளிநாட்டுத் தலைவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து கெளரவிப்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் அடுத்த ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக வருமாறு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளுடன், குறிப்பாக பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் உறவு சமீப ஆண்டுகளில் சிறப்பாக மாறியுள்ளது. மேக்ரான் வருகை இந்த உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரீஸில் நடைபெற்ற பாஸ்டில் தின பேரணி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது நினைவிருக்கலாம்.
பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளது என்பது நினைவிருக்கலாம். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவும் இதுவரை இல்லாத அளவுக்கு இறுக்கமாகியுள்ளது. மேக்ரானின் இந்திய வருகையின்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கூட கையெழுத்தாக வாய்ப்புள்ளது.
1976ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஜேக்கஸ் சிராக் சிறப்ப விருந்தினராக கலந்து கொண்டார். அவர்தான் முதல் பிரெஞ்சு தலைவர் ஆவார். அதன் பின்னர், 1980ல் வெலரி ஜிஸ்கார்ட் டி எஸ்டாய்ங்க், 1998ல் மீண்டும் ஜேக்கஸ் சிராக், 2008ல் நிக்கோலஸ், சர்கோஸி, 2016ல் பிரான்காய்ஸ் ஹாலன்டே ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்குத்தான் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் பிடனால் கலந்து கொள்ள முடியாத நிலை இருப்பதாக அமெரிக்கா கூறி விட்டது. இதையடுத்தே பிரான்ஸ் அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}