2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!

Nov 12, 2025,05:26 PM IST

சென்னை:  தமிழ்நாடு அரசு 2026 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 


தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் வெளியிட்ட இந்த அறிவிப்பில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்குப் பொருந்தும் 24 பொது விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 


இந்தப் பட்டியலில் பொங்கல், குடியரசு தினம், ரம்ஜான், தமிழ் புத்தாண்டு, மே தினம், பக்ரீத், சுதந்திர தினம், மிலாடி நபி, ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய பண்டிகைகள் அடங்கும்.  வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான ஆண்டு இறுதி கணக்கு முடிப்பு ஏப்ரல் 1 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று சிறப்பு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விடுமுறை தினங்கள்:




ஜனவரி 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) பொங்கல் பண்டிகையும், ஜனவரி 26 ஆம் தேதி (திங்கட்கிழமை) குடியரசு தினமும் அடங்கும். மார்ச் 21 ஆம் தேதி (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை, ஏப்ரல் 14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழ் புத்தாண்டு, மே 1 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மே தினம், மே 28 ஆம் தேதி (வியாழக்கிழமை) பக்ரீத் பண்டிகை ஆகியவை விடுமுறை நாட்களாகும். 


ஆகஸ்ட் 15 ஆம் தேதி (சனிக்கிழமை) சுதந்திர தினமும், ஆகஸ்ட் 26 ஆம் தேதி மிலாடி நபி தொழுகை நாளும் விடுமுறையாகும். அக்டோபர் 19 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும், நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளியும், டிசம்பர் 25 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


மேலும், வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கணக்கு முடிப்புப் பணிக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று சிறப்பு விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்