பெங்களூரு: கர்நாடக பாஜக எம்.பி.மகன் மீது 24 வயது பெண் திருமண மோசடி புகார் செய்துள்ளார்.
தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மைசூர் ஹோட்டலில் ரூம் போட்டு, தன்னுடன் உறவு கொண்டு விட்டு பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்தவர் ஒய். தேவேந்திரப்பா. இவர் பாஜக எம்.பி. ஆவா். இவரது மகன்தான் ரங்கநாத். 42 வயதான ரங்கநாத், கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர். இவர் மீது 24 வயது பெண் பாலியல் புகார் செய்துள்ளார்.
அந்தப் புகாரில், தான் கல்லூரி பேராசிரியராக பணிபுரிவதாக கூறி தன்னுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டார் ரங்கநாத். இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் தான் ரங்கநாத் எனக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் நெருங்கிப் பழகினோம். இது காதலானது. உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவர் கூறியதால் நானும் நம்பினேன், எனது பெற்றோரையும் அவர் நம்ப வைத்து விட்டார்.

இந்த நிலையில் மைசூருக்கு ஒரு முறை போனபோது அங்கு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கினோம். அப்போது குடிபோதையில் இருந்த ரங்கநாத் என்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டார். ஆனால் அதன் பிறகு என்னை தவிர்க்க ஆரம்பித்தார். கேட்டதற்கு வயது வித்தியாசம் இருக்கிறது, திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி விட்டார். இதுகுறித்து எம்.பி. தேவேந்திரப்பாவிடம் புகார் கூறியும் பலன் இல்லை என்று கூறியுள்ளார்.
இந்தப் புகாரின் பேரில், போலீஸார் தற்போது ரங்கநாத் மீது ஐபிசி 417, 420, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}