லக்னோ: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம்துலால் கான்ட் என்பவருக்கு, 9 ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில் 25 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சட்டசபையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலே சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி இழந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவோர் அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிடவும் முடியாது.
சோன்பத்ரா என்ற இடத்தில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கியவர் கான்ட். கடந்த 9 வருடமாக விசாரணை நடந்த நிலையில் தற்போது அவருக்கு 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ. 10 லட்சம் அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு இப்போது திருமணமாகி அவருக்கு குழந்தையும் உள்ளது. இந்தப் பெண்ணிடம் அந்த அபராதத் தொகையை செலுத்த கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் உ.பி. சட்டசபையில் பல உறுப்பினர்கள் தண்டனை பெற்று இப்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு சமாஜ்வாடி எம்எல்ஏ ஆசம்கான், பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதே போல 2020ம் ஆண்டு குல்தீப் சிங் செங்கார் என்ற எம்எல்ஏ பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்று தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு ஆசம் கானின் மகன் அப்துல்லா ஆசம் கான் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தற்போது இன்னொரு பாஜக எம்எல்ஏ தகுதிநீக்கம் ஆகியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி நாளை டில்லி பயணம்...நயினார் சொன்ன நல்லது.. யாருக்கு நடக்க போகிறது?
வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
பாமக கட்சியும்,மாம்பழச் சின்னமும் ராமதாஸ் அவர்களுக்குத் தான் சொந்தம்: எம்எல்ஏ அருள் பரபரப்பு பேட்டி!
தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
அதிமுக ஓட்டுகள் தவெகவுக்கு போகாது: விஜய்க்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அன்புமணிக்கே மாம்பழ சின்னம்.. தேர்தல் கமிஷன் சொல்லி விட்டது.. வழக்கறிஞர் பாலு தகவல்
ஒட்டுமொத்த மீடியாக்களையும் ஆக்கிரமித்த திமுக, தவெக.. எங்கே கோட்டை விடுகிறது அதிமுக?
10 நாள் கெடு முடிந்தது.. யாருக்கு புரிய வேண்டுமோ புரியும்.. செங்கோட்டையனின் புதிய மெசேஜ்
அன்புக்கரங்கள்.. இரு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளுக்கு உதவும் திட்டம்.. இன்று முதல்!
{{comments.comment}}