டல்லாஸ் மால் துப்பாக்கிச் சூட்டில்.. 27 வயது இந்தியப் பெண்ணும் பலி.. அதிர வைக்கும் தகவல்

May 09, 2023,10:02 AM IST
ஹூஸ்டன்: டல்லாஸ் மால் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 9 பேரில் 27 வயது இந்தியப் பெண்ணும் ஒருவர் என்று தற்போது தெரிய வந்துள்ளது. 

அந்தப் பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா தடிகொண்டா. ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். அங்கு புராஜக்ட் என்ஜீனியராக பணியாற்றி வந்தார். மெக்கின்னே என்ற நகரில் வசித்து வந்தார். தனது நண்பருடன் அங்கு ஷாப்பிங் வந்தபோது துப்பாக்கிச் சூட்டில் சிக்கி பலியாகியுள்ளார்.



டல்லாஸின் ஆலன் பிரீமியம் சூப்பர் மார்க்கெட் பகுதியில், புகுந்த மாரிசியோ  கார்சியா என்ற நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் 8 பேர் பரிதாபமாக பலியானார்கள். பின்னர் போலீஸ் அதிகாரி ஒருவர் மாரிசியோவை சுட்டுக் கொன்றார்.

கொல்லப்பட்டவர்களில் ஐஸ்வர்யாவும் ஒருவர். இவரது தந்தை ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் நீதிபதியாக இ��ுக்கிறார். ஐஸ்வர்யா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார்.  சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரம் முன்புதான் தனது குடும்பத்தாரிடம் பேசியிருந்தார் ஐஸ்வர்யா.  துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துக் கேள்விப்பட்டதும் அவர்கள் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்துள்ளனர். ஆனால் அவர் எடுக்கவில்லை. பிறகுதான் நடந்த துயரம் தெரிய வந்தது.

ஐஸ்வர்யாவின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  ஹைதராபாத்தில்தான் என்ஜீனியரிங் படித்தார் ஐஸ்வர்யா. முதுநிலை படிப்பை அமெரிக்காவில் முடித்த அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பணியாற்றி வந்தார்.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

news

கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி

news

தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்