அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 3 பேர் திடீர் ராஜினாமா - தவெக.வில் இணைந்ததால் பரபரப்பு!

May 25, 2026,05:01 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, பதவியேற்ற வெறும் 21 நாட்களிலேயே இந்த அதிரடி திருப்பம் நிகழ்ந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பலத்த விவாதங்களை கிளப்பியுள்ளது.


இன்று பிற்பகல் வாக்கில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்),  ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் சத்யபாமா (தாராபுரம்) ஆகிய மூவரும் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு அவர்கள் சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான ராஜினாமா கடிதங்களை முறைப்படி சமர்ப்பித்தனர். 


தவெக-வில் ஐக்கியம்: 




சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்த கையோடு, இந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் உடனடியாக தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்தனர். 


இந்தச் சந்திப்பின் போது, தங்களை அதிகாரப்பூர்வமாக தவெக கட்சியில் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அப்போது கடந்த 15 நாட்களில் நடந்து வருவதை அம்மாவின் ஆட்சியாக பார்ப்பதாக 3 எம்எல்ஏக்களும் தெரிவித்தனர்.


அரசியல் வட்டாரத்தில் நீடிக்கும் பரபரப்பு :


தேர்தலில் அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று, மக்கள் பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள் (வெறும் 21 நாட்களில்) கட்சி மாறி, பதவியையும் துறந்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. 


தமிழக வெற்றிக் கழகம் நோக்கி அதிமுக-வின் முக்கியப் புள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது, பிரதான எதிர்க்கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாகவும், தவெக-வின் அரசியல் பலத்தை மேலும் அதிகரிக்கும் ஒரு நகர்வாகவும் அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது. 


வரும் நாட்களில் இந்த ராஜினாமாவின் பின்னணி குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தவெகவுக்கு 111 இடங்கள் கிடைக்கலாம்


தற்போது தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு தொகுதி காலியாக உள்ளது. தவெக வசம் தற்போது 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். தற்போது ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களையும் சேர்த்தால் காலியிடம் 4 ஆக உயரும். நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடந்து நான்கிலும் தவெகவே வெல்வதாக வைத்துக் கொண்டால் அக்கட்சியின் பலம் 111 ஆக உயரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மறைந்தார் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி.. 3 தலைமுறையாக ரசிகர்களை மகிழ வைத்த வானம்பாடி!

news

Vietnam boat tragedy: வியட்நாட் துயரத்தில் 10 தமிழர்கள் பலி.. முதல்வர் சி. ஜோசப் விஜய் வேதனை

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

Jananayagan release update விரைவில் ஜனநாயகன் ரிலீஸ்...போஸ்டருடன் வந்த புதிய அப்டேட்

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா 2026 நாளை துவக்கம்

news

இந்தியாவில் OTT தளங்களுக்கும் சென்சார் சான்று: மத்திய அரசு திட்டம்!

news

வியட்நாமில் பரிதாபம்.. சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து.. 15 இந்தியர்கள் பலி

அதிகம் பார்க்கும் செய்திகள்