சென்னை: சென்னை தாம்பரம் அருகே ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் டிராக்கை கடக்கும்போது ரயில் மோதி 3 மாற்றுத்திறானாளி சிறார்கள் மரணம் அடைந்தனர்.
கர்நாடகவை சேர்ந்த சுரேஷ் (15), ரவி (12), மஞ்சுநாத் (11) ஆகிய 3 பேரும் மாற்றுத்திறனாளிகள். சகோதரர்களான சுரேஷ், ரவி, இருவருக்கும் காது கேட்காது. உறவினரான மஞ்சுநாத்திற்கு வாய் பேசவராது. இவர்கள் 3 வரும் செங்கல்பட்டு, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள இவர்களது பெற்றோரை காண வந்தனர்.
பெற்றோர்கள் இருவரும் ஊரப்பாக்கம் பகுதியில் தங்கி கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
3 வரும் கர்நாடகாவில் பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர். பெற்றோரை காண வந்த 3 சிறுவர்களும் அருகில் இருந்த தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, சென்னை கடற்கரையில் இருந்து வேகமாக வந்த ரயில் இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 3பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரித்தனர். 3 பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பினர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}