இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு இந்து கோவில்கள் மீது துப்பாக்கி ஏந்திய கும்பல் தாக்குதல் நடத்தியதுடன் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 30 இந்துக்களை சிறைபிடித்து வைத்திருந்ததை பாகிஸ்தான் மனித உரிமைகள் கழகம் உறுதி செய்துள்ளது.
பாகிஸ்தானில் இந்துக்கள் மீதும், இந்து கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் "ஷீமா ஹைதரின் காதல் விவகாரம்" தான்.
பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணான ஷீமா ஹைதர் என்பவர், நான்கு குழந்தைகளுக்கு தாய். இவருக்கு இந்தியாவை சேர்ந்த சச்சின் மீனா என்ற 22 வயது இளைஞர் மீது காதல் ஏற்பட்டது. இதனால் தனது குடும்பம், குழந்தைகளை விட்டு விட்டு இந்தியா வந்த ஷீமா ஹைதர், நொய்டாவில் தனியாக வீடு எடுத்து தனது காதலருடன் வசிக்க துவங்கினார்.
ஆனால் சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் வந்ததாக ஷீமா கைது செய்யப்பட்டார். இருந்தாலும் காதலனை விட்டு பிரிந்து செல்ல மறுத்த ஷீமா, தனக்கு இந்திய குடியுரிமை அளிக்க கேட்டு சட்ட போராட்டம் நடத்தி வந்தார். இந்த விவகாரம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக் கோவில்கள் பலவும் தாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் கராச்சி மற்றும் சிந்து பகுதியில் உள்ள இரண்டு இந்து கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் சிந்து பகுதியில் தான் 30 இந்துக்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருப்பது தெரிய வந்தது. விவரம் அறிந்து போலீசாரும், மனித உரிமைகள் கழகத்தினரும் அங்கு சென்ற போது, ஆயுதம் ஏந்திய அந்த கும்பல் தப்பி ஓடி விட்டதாக சொல்லப்படுகிறது.
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}