மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு காலமானார். இவருக்கு வயது 32. இந்தியாவில் அதிகரித்து வரும் கர்ப்பப்பை புற்றுநோய் அபாயங்களை உணர்த்தும் வகையில் இவரது மரணச் செய்தி வந்துள்ளது.
பூனம் பாண்டேவின் சோசியல் மீடியா பக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் அவரது மரணச் செய்தியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், இன்றைய காலை எங்களுக்கு மிகவும் கஷ்டமானதாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பபை வாய் புற்றுநோய்க்கு இழந்து விட்டோம் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என பதிவிட்டுள்ளனர்.
பூனம் பாண்டேவின் மரணச் செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருக்கு கர்ப்பப்பை புற்று நோய் வந்திருப்பது முன்பே கண்டறியப்பட்டுள்ளது. அதுதொடர்பான தொடர் சிகிச்சையிலும் அவர் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. புற்றுநோய் முற்றிய நிலையில்தான் அவரது மறைவு வந்திருக்கிறது.
கர்ப்பப்பை புற்றுநோய்
நேற்று இரவு பூனம் பாண்டே மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கர்ப்பப் பை புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதற்கு இப்போது ஒரு பிரபலத்தின் உயிர் பறி போயுள்ளது. பெண்கள் மிகவும் விழிப்புடனும், கவனத்துடனும் இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
1991 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் பிறந்தவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கியவர். கடந்த 2023 ஆம் ஆண்டு நாஷா என்ற ஹிந்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டில் தன் காதலனான ஜாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார். சோசியல் மீடியாவில் எப்போதும் பிசியாகவும், அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டும் வந்தவர். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.
நிர்வாணமாக ஓடுவதாக கூறியவர்
2011ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பைத் தொடரின்போது, இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நான் பீச்சில் நிர்வாணமாக ஓடுவேன் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் பூனம் பாண்டே. இதேபோல அவ்வப்போது ஏதாவது பரபரப்பாக பேசியபடியும், மிகவும் ஆபாசமான வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டபடியும் இருந்து வந்தார் பூனம் பாண்டே.
2011ல் நடந்த பிக் பாஸ் இந்தி போட்டியிலும் கூட பூனம் பாண்டே கலந்து கொண்டார். அதிலும் கூட பரபரப்புக்குப் பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டார். பல்வேறு மொழிப் படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்தும் வந்தார் பூனம் பாண்டே.
மிகவும் இளம் வயதில் கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பூனம் பாண்டேவின் மரணம் பாலிவுட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆடிப் பெருக்கு சரி.. அந்த 18ம் எண்ணுக்கு எவ்வளவு விசேஷங்கள் இருக்கு தெரியுமா?
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. காவிரிக் கரைகளில் விழாக்கோலம்.. தாலி மாற்றி பெண்கள் மகிழ்ச்சி!
விஜய்யின் காஸ்ட்லி மிஸ்.. ஓபிஎஸ்ஸை தவற விட்டது எப்படி?.. திமுகவின் மின்னல் வேக ஸ்கெட்ச்!
காமெடி நடிகர் மதன்பாப் மரணம்.. புற்றுநோயால் உயிர் பிரிந்தது.. திரையுலகினர் அஞ்சலி
இந்தியப் பொருளாதாரம் எப்படி இருக்கு.. டிரம்ப்புக்கு நோஸ் கட் கொடுத்த .. அமெரிக்க ஏஐ தளங்கள்!
11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்!
எத்தனைப் பேரின் உயிரை திமுக அரசு பறிக்கப் போகிறது என்று தெரியவில்லை: டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தந்தையை உளவு பார்த்த மகன்: டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு வைத்த டாக்டர் ராமதாஸ்!
நலம் காக்கும் ஸ்டாலின்... சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
{{comments.comment}}