கொழும்பு: இலங்கைக்கு சுற்றுலா செல்ல இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலாவிற்காக வெளிநாடுகளுக்கு செல்வது என்பது இப்பொழுது சாதாரணமாகி விட்டது. முன்னர் எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் வெளி நாட்டு சுற்றுலா என்று இருந்து வந்தது. ஆனால், அது இப்போது சாதாரணமாகி விட்டது. இதற்காக கடன் கூட வங்கிகளில் வாங்க முடியும். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வரும் இலங்கை அரசு, சுற்றுலாப் பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் விதமாக விசா தேவையில்லை என்று தெரிவித்துள்ளது.

வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் விசா என்பது மிக முக்கியமானதாக இருந்து வந்த நிலை தற்போது மாறியுள்ளது. நேபாளம், பூட்டான், தாய்லாந்து, மாலத்தீடு, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணம் மேற்கொள்ளலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த வருசையில் தற்போதும் இலங்கையும் சேர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளைச் சேர்ந்த இலங்கைக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், விசா இல்லாமல் 6 மாதங்களுக்கு இலங்கை செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சவுதி , ரஷ்யா, சீனா, இந்தியா, தென்கொரியா, ஜப்பான்,நேபால், இந்தோனேசியா, சீனா, தாய்லாந்து, மாலேசியா, கனடா,இத்தாலி, ஓமன் உள்ளிட்ட 35 நாடுகளுக்கு விசா தேவையில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}