சென்னை: 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஐசரி கணேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் வழியனுப்பி வைத்தனர்.
கோவாவில் அக்டோபர் 25 முதல் நவம்பர் 9 வரை இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 530 விளையாட்டு வீரர்களை வழியனுப்பும் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் ஐசரி கணேஷ் மற்றும் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் வீரர்களின் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தி வைத்தனர். இவர்களுடன் 116 அதிகாரிகள் கொண்ட குழுவும் கோவா செல்கிறது.
அப்போது உரையாற்றிய ஐசரி கணேஷ் பேசுகையில், கடந்த தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டுக்கு ஐந்தாம் இடம் கிடைத்தது, இந்த முறை இரண்டாம் அல்லது மூன்றாம் இடத்திற்கு வருவார்கள் என நம்பிக்கை உள்ளது, போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் அளிக்க உள்ளோம். இது மட்டுமல்லாது சென்னையில் மினி ஒலிம்பிக் நடத்த உள்ளோம்.

விளையாட்டில் அரசியலையும் சிபாரிசையும் அனுமதிக்க மாட்டோம். விரைவில் தமிழகத்தில் தேசிய அளவில் போட்டிகள் அதிகம் நடைபெறும் என்றார்.

பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பேசியபோது தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற கனவு விரைவில் நனவாகும். அதற்கான முன்னோட்டமாக ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ளோம். அவர்களை கௌரவிக்கும் விதமாக விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அதில் ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்ற அனைத்து வீரர்களும் தங்கள் பெற்றோருடன் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து கை கொடுக்கும் பாஜக.,வின் வெற்றி பார்முலா... பீகாரிலும் பலித்தது எப்படி?
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம்: நயினார் நாகேந்திரன்
ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு
அதிமுக எதிர்க்கட்சியாக மட்டுமல்ல,உதிரி கட்சியாக கூட இருக்க முடியாது:முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இன்றைக்கு எங்கெல்லாம் கனமழை பெய்யும் தெரியுமா? - இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. வேகமாக முன்னேறும் தேஜகூ.. போராடும் ஆர்ஜேடி.. தடுமாறும் காங்.!
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}