3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

Jul 30, 2025,06:06 PM IST

வேற்று கிரகத்திலிருந்து ஒரு விண்கலம் வந்து கொண்டிருப்பதாகவும், அது நவம்பர் மாதத்தில் பூமியைத் தாக்கக்கூடும் என்றும் ஒரு விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இதனால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


3I/ATLAS என்று பெயரிடப்பட்ட ஒரு விசித்திரமான விண்வெளிப் பொருள் குறித்த தகவல்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இது வேற்று கிரகவாசிகளின் விண்கலமாக இருக்கலாம் என்றும், அது பூமியைத் தாக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 


3I/ATLAS என்றால் என்ன?




இந்த 3I/ATLAS ஒரு அரிய விண்கோள் போன்ற ஒரு பொருள். இது நமது சூரிய மண்டலத்திற்குள் மிக வேகமாகப் பயணிக்கிறது. ஜூலை 1 அன்று இது முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. மணிக்கு 1,30,000 மைல்களுக்கும் அதிகமான வேகத்தில் சூரியனை நோக்கி இது நகர்கிறது.


இது ஒரு வால்மீன் என்றும், சுமார் 15 மைல் அகலம் கொண்டது என்றும் ஆரம்பத்தில் கூறப்பட்டது. இது நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியை விட பெரியது. இந்த 3I/ATLAS இல் அதிக அளவு நீர் பனி உள்ளது. இந்த நீர்ப் பனி சுமார் ஏழு பில்லியன் ஆண்டுகளாக இதில் சிக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதாவது, இது நமது சூரிய குடும்பத்தை விட பழமையானது.


இந்த மர்மக் கோளில் கரிம மூலக்கூறுகள், சிலிக்கேட்டுகள் மற்றும் கார்பன் அடிப்படையிலான கனிமங்கள் இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ள சிறுகோள்களின் தன்மையுடன் ஒத்துள்ளது.


இந்த நிலையில்தான் தற்போது புதிய தகவல் ஒன்றை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். அதாவது, இந்த 3I/ATLAS ஒரு சாதாரண வால்மீன் இல்லை என்றும், வேற்று கிரகவாசிகளின் உளவு பார்க்கும் விண்கலமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர். விண்கோள் என்ற போர்வையில் வரும் வேற்றுகிரகவாசிகளின் விண்கலமாக இது இருக்கக் கூடும் என்று சந்தேகிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.


விஞ்ஞானிகளின் கணிப்புப்படி, 3I/ATLAS செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி கோள்களுக்கு அருகில் செல்லும். இதனால், வேற்று கிரகவாசிகளுக்கு அந்த கோள்களில் உளவு பார்க்கும் சாதனங்களை வைப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.


சரி இந்த மர்மப் பொருளை நம் கண்களால் பார்க்க முடியுமா.. இந்த பொருள் நவம்பர் மாத இறுதியில் சூரியனுக்கு மிக அருகில் வரும்போது, பூமியில் இருந்து பார்க்க முடியாது. காரணம் பூமியில் உள்ளவர்களால் நம்மைப் பார்க்க முடியாதபடி அந்த விண்கலத்தில் வேற்றுகிரகவாசிகள் அமைப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கிறார்கள்.


இந்த வேற்றுகிரகவாசிகளின் விண்கலமாக சந்தேகிக்கப்படும் விண் கோளானது பூமியின் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கா என்ற கேள்விக்கு, வாய்ப்பு இல்லை என்று கூறி விட முடியாது. காரணம், இது உளவு கோளாக இருந்தால் நிச்சயம் தாக்குதலுக்கும் வாய்ப்புண்டு என்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.


அதேசமயம், இதை தடுத்து எதிர்கொள்வது என்பது சிக்கலானது. 3I/ATLAS சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு பூமியில் இருந்து எந்த விண்கலமும் அதை அடைய முடியாத அளவுக்கு வேகமாக நகர்கிறது. இப்படி உலா வரும் இந்தத் தகவல்களை பல விஞ்ஞானிகள் ஏற்க மறுக்கிறார்கள். இது சாதாரண ஒரு வால்மீன்தான், தேவையில்லாமல் பில்டப் செய்கிறார்கள் என்பது பெரும்பாலான விஞ்ஞானிகளின் வாதமாக உள்ளது.


இந்த நேரத்தில் பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்காவின் கணிப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது. 2025ம் ஆண்டில் வேற்றுகிரகவாசிகள் பூமியைத் தொடர்பு கொள்வார்கள் என்று அவர் கணித்துள்ளார்.. ஒரு வேளை அவர் சொல்வது இந்த சம்பவத்தைத்தானா என்ற கேள்வியும் எழுகிறது.


பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

முருகனுக்குக் கிடைக்காமல் போன ஞானப்பழத்தின் கதை தெரியுமா?

news

பாஜக மாநில அளவிலான பதவியில் குஷ்பு.. விஜயதாரணிக்கு இந்த முறையும் பதவி இல்லை!

news

மத்திய அரசுக்கு நேற்று.. மாநில அரசுக்கு இன்று.. கண்டனத்திலும் பேலன்ஸ் செய்யும் ஓ.பி.எஸ்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 31, 2025... இன்று இந்த ராசிகளுக்கு நல்ல செய்தி தேடி வரும்

news

3I/ATLAS.. சூரியனை நோக்கி வரும் மர்மப் பொருள்.. வேற்றுகிரக விண்கலமா.. பூமிக்கு ஆபத்தா?

news

வரலாற்றுப் பிழை செய்து விட்டார் ஜெயலலிதா.. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சால் பரபரப்பு!

news

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

1967,1977 தேர்தலைப் போல 2026 தேர்தலும் முக்கியமானதாக அமையும்: தவெக தலைவர் விஜய்!

news

மை டிவிகே... உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார்... தவெக தலைவர் விஜய்!

அதிகம் பார்க்கும் செய்திகள்