அன்னிக்கு அந்த 4.. இன்னிக்கு இந்த 4.. வெள்ளத்தில் தவிக்கும் நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி!

Dec 17, 2023,06:53 PM IST

திருநெல்வேலி: டிசம்பர் முதல் வாரத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கித் தவித்த நிலையில் தற்போது மாதத்தின் மத்தியில் தென் கோடி மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகியவை வெள்ளத்திடம் சிக்கியுள்ளன.


சென்னையில் பெரு மழை பெய்தால் வெள்ளக்காடாகி விடும். சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களும் இதில் சிக்கிக் கொள்ளும்.  எப்போதெல்லாம் பெரு மழை பெய்கிறதோ அப்போதெல்லாம் இந்த நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதப்பது வழக்கம்.




இந்த நிலையில் இப்போது தென் கோடி மாவட்டங்கள் நான்கு, வெள்ளத்தில் சிக்கியுள்ளன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. எப்படி சென்னையில் பேய் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதோ அப்படியே டிட்டோ இங்கும் நடந்து வருகிறது.


குறிப்பாக நாகர்கோவில், திருநெல்வேலி நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. நாகர்கோவிலின் பல பகுதிகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. ஊரே வெள்ளக்காடாகியுள்ளது. இதே நிலைதான் நெல்லையிலும். பல பகுதிகளிலும் வெள்ளம் ஆற்றிலும் ஓடுகிறது, ஊருக்குள்ளும் ஓடுகிறது.



பல இடங்களில் இடுப்பளவு ஓடும் தண்ணீரில் குதித்து இளைஞர்கள் நீச்சலடித்து மகிழ்வதைக் காண முடிந்தது. "வெள்ளம் வந்தா அழுது புரள நாங்க என்ன சென்னையாலே.. ஜாலியா என்ஜாய் பண்ற நெல்லைல" என்று அவர்கள் சொல்லாமல் சொல்வது போல உள்ளது. கூடங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நாளையும் மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த நான்கு மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட்டும், நாளை ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரியில் பேய் மழை கொட்டி வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலும் பல இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.

இப்போதுதான் சென்னை உள்ளிட்ட நான்கு வட மாவட்டங்கள் வெள்ளத்திலிருந்து மீண்டு இப்போது வெள்ள நிவாரணத் தொகையை வாங்க ஆரம்பித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்