டெல்லி: கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் 403 பேர் வெளிநாடுகளில் மரணமடைந்துள்ளனர். பல்வேறு காரணங்களால் இவர்கள் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அளித்த பதில் இதை தெரிவித்துள்ளது.
மத்திய அமைச்சர் வி.முரளீதரன் இதுதொடர்பான அறிக்கை ஒன்றை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இயற்கை மரணங்கள், விபத்து, கொலை என்று பல்வேறு காரணங்களினால் இந்த மாணவர்கள் மரணத்தை சந்தித்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிக அளவிலான மாணவர்கள் இறந்தது கனடாவில்தான். கனடாவில் 91 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிாலந்தில் 48, ரஷ்யா 40, அமெரிக்கா 36, ஆஸ்திரேலியா 35, உக்ரைன் 21, ஜெர்மனி 20, சைப்ரஸ் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் தலா 10 இந்திய மாணவர்கள் இறந்துள்ளனர்.

இந்திய மாணவர்களின் நலன் குறித்து மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க அனைத்துத் தரப்பினருடன் இணைந்து செயல்பட மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. இந்திய தூதரக அதிகாரிகள், தத்தமது நாடுகளில் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று அங்கு படிக்கும் இந்திய மாணவர்களைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்திய மாணவர்களுக்கு ஏதாவது பாதகம் நடந்தால் உடனடியாக தூதரக அதிகாரிகள் அதுகுறித்து முன்னுரிமை கொடுத்து ஆவண செய்கிறார்கள். அவசர கால மருத்துவ உதவி, நாடு திரும்ப உதவுவது, வெளிநாட்டுக்குச் செல்லும் இந்திய மாணவர்கள் தங்குமிடத்தை தேர்வு செய்வதில் பிரச்சினை ஏற்பட்டால் உதவுவது ஆகிய பணிகளையும் இந்தியத் தூதரகம் செய்கிறது என்றார் அமைச்சர் முரளீதரன்.
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}