சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டர் உரிமையாளர் எலான் மஸ்க்கை பாலோ செய்பவர்களில் பலரும் போலிகளாம். அதாவது கிட்டத்தட்ட 42 சதவீதம் பேர் டுபாக்கூர்களாம்.
டிவிட்டரில் ஒரிஜினல் ஐடிகளை விட இந்த ஃபேக் ஐடிகளின் புழக்கம்தான் ஜாஸ்தி. பலருக்கும் இந்த ஃபேக் ஐடிகள்தான் சூப்பராக முட்டுக் கொடுக்கிறார்கள். ஆனால் டிவிட்டர் உரிமையாளருக்கே ஃபேக் ஐடிகள்தான் பாலோயர்களாக அதிக அளவில் உள்ளனர் என்பது புதுத் தகவலாக இருக்கிறது.
எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் 15,32,09,283 பாலோயர்கள் உள்ளனர். அதாவது 15 கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்து 283 பேர் உள்ளனர். ஆனால் இதை ஆய்வு செய்து பார்த்ததில் 42 சதவீதம் பேர் அதாவது 6.53 கோடி பேர் போலிகள் என்று தெரிய வந்துள்ளது. இந்த கணக்களுக்கு ஒரு பாலோயர் கூட கிடையாதாம். இந்தத் தகவலை மாஷபிள் என்ற இணையதளம் புள்ளிவிவரத்துடன் வெளியிட்டுள்ளது.
டிரவிஸ் பிரவுன் என்பவர் இதுதொடர்பாக சேகரித்துக் கொடுத்த தகவல்களை வைத்து இந்த ஆய்வை செய்துள்ளது மாஷபிள் இணையதளம். மேலும் மஸ்க்கின் பாலோயர்களில் வெறும் 4 லட்சத்து 53 ஆயிரம்பேதான் அதாவது 0.3 சதவீதம் பேர்தான் டிவிட்டர் பிரீமியத்தை சப்ஸ்கிரைப் செய்துள்ளனராம். 72 சதவீதத்திற்கும் மேலானோருக்கு சராசரியாக 10க்கும் குறைவான பாலோயர்கள்தான் உள்ளனர்.
6.25 கோடி பாலோயர்கள் ஒரு டிவீட் கூட போட்டதில்லையாம். 10 கோடிப் பேர் சராசரியாக 10 டிவீட் வரைதான் போட்டுள்ளனராம்.
கடந்த 2022ம் ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து டிவிட்டரை வாங்கினார் மஸ்க். அது முதல் ஏகப்பட்ட மாற்றங்களை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது பாலோயர் குரூப்பை பெரிய போகஸ் என்பது போல செய்திகள் வெளியாகியுள்ளது அதிர வைப்பதாக உள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}