- மஞ்சுளா தேவி
இந்தூர்: நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே சண்டையின் போது, சக மாணவனை, மூன்று மாணவர்கள் சேர்ந்து காம்பஸ்சால் 108 முறை குத்திய சம்பவம் இந்தூரில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. நவம்பர் 24ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் மாணவர் ஒருவரை அவருடன் படிக்கும் சக மாணவர்கள் மூன்று பேர் சேர்ந்து காம்பஸ்சால் 108 முறை தாக்கியுள்ளனர். இதனால் அந்த மாணவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவருடைய தந்தை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை ஏற்று காவல் உதவி ஆணையாளர் விவேக் சிங் சவுகான் விசாரணை மேற்கொண்டார். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மூவரும் 10 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பதால் இவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்று சட்ட ரீதியான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழு தலைவர் பல்லவி போர்வால் கூறுகையில், 4ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை உடன்படிக்கும் சக மாணவர்கள் காம்பஸ்சால் தாக்கிய சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வளவு சிறிய வயதுடைய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுடைய குடும்பத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும் மாணவர்கள் வன்முறை காட்சிகள் அடங்கிய வீடியோ கேம் எதுவும் விளையாடுகிறார்களா என்பதை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்தார்.
9 வயது சிறுவர்களுக்குள் கொலை வெறி ஏன்?
இந்த சிறுவர்களுக்கு 9 வயதுதான் இருக்கும். இப்படி சிறு வயதுடைய குழந்தைகள் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்..? அவர்களுக்கு வீட்டில் என்ன பிரச்சனை ..?அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனரா.. வீட்டு வன்முறை அவர்களது மனதை வன்முறைக் களமாக்கியுள்ளது...அல்லது வீட்டிற்கு வெளியே எதுவும் பிரச்சனையா.. என்பதை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அந்தக் காலம் போல் இக் காலம் கிடையாது. இப்போது எல்லாமே டிஜிட்டல் மயமாக உள்ளது. குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றாலும் கையில் மொபைல் மட்டும் இருந்தாலே போதும் .எல்லா விஷயத்தையும் கற்றுக் கொள்வதற்கு அது போதும். ஒவ்வொரு பெற்றோரும் அவர்களுடைய குழந்தைகளிடம் தினமும் 10 நிமிடமாவது நேரம் ஒதுக்கி மனம் விட்டு பேச வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே குழந்தைகள் அவர்களது பிரச்சனை என்னவென்று கூறுவார்கள். அதனை நாம்மால் சரி செய்ய முடியும்.
9 வயது சிறுவர்களுக்கு கொலை வெறியோடு தாக்கும் மன நிலை இருக்கிறது என்பது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.. குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் பள்ளிப் பிள்ளைகளுக்கு தொடர் கவுன்சிலிங் தரப்பட வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்!
ஸ்ரீகாகுளம் கோவில் நிர்வாகம் அனுமதி வாங்கவில்லை...விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு
அரசின் தோல்விக்காக.. ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை கையேந்த வைப்பது கண்டிக்கத்தக்கது: அன்புமணி
மத்திய அரசு பள்ளிகளில் இந்தியை திணிக்கிறது...சித்தராமைய்யா காட்டம்
திமுகவிடம் இருந்து தமிழ்நாட்டை மீட்போம்.. 2026ல் உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தலைவர் விஜய்
Aadhar update ஆதாரில் இன்று முதல் புதிதாக நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் பற்றி தெரியுமா?
டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஹன் போபண்ணா அறிவிப்பு
ஸ்ரேயாஸ் ஐயர் சிட்னி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தமிழ்நாடு என்றால் தமிழ் என்ற அடையாளத்தை தமிழகம் இழந்து வருகிறது: அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}