துபாய்: இந்தியர்கள் துபாய்க்கு பலமுறை வந்து செல்லும் வகையில் ஐந்து ஆண்டு விசாவை அறிமுகம் செய்துள்ளது துபாய் அரசு.
வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் மோகம் கொரோனாவுக்கு முன்னர் அதிகமாக இருந்தது. இந்த வெளிநாட்டு மோகம் கொரோனா காலத்தில் அடியோடு நின்று போயிருந்தது. உயிர் பயம் ஏற்பட்டதால் வெளிநாடுகளுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமாக குறைந்து காணப்பட்டது. அது தற்பொழுது மாறி விட்டது.
மறுபடியும் இந்தியர்களுக்கு வெளிநாட்டு மோகம் அதிகரிக்கத் துவங்கி விட்டது என்று கூறலாம். அதிலும் வளைகுடா நாடுகளாகிய ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர் அதிகமாகி விட்டனர். இருநாடுகள் இடையே பொருளாதாரம், சுற்றுலா, வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கை எடுத்து வருகிறது துபாய் அரசு.
இதன் காரணமாக, கடந்த ஆண்டில் துபாய்க்கு 24 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்கள் பயணம் மேற்கொண்டனர். இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் பயணிகளை கவரும் விதத்தில் துபாய் அரசு புதிய விசா முறையை அறிமுகம் செய்துள்ளது. இந்த விசா 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகுமாம். இந்த 5 ஆண்டு விசாவால் ஒருவர் பல முறை துபாய்க்கு செல்ல முடியுமாம்.
மேலும் இந்த விசா கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு 2 முதல் 5 நாட்களுக்குள் வழங்கப்படுகிறதாம். இந்த விசாவை பயன்படுத்தி ஒருவர் 6 மாதங்கள் அதாவது 180 நாட்கள் துபாயில் தங்கிக் கொள்ள முடியுமாம். இந்த விசாவை பிஸினஸ் டிரிப், சுற்றுலா உள்ளிட்ட காரணங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என துபாய் அரசு தெரிவித்துள்ளது.
இந்த முறை பயன்பாட்டில் உள்ள காரணத்தினால் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}