சென்னை: தமிழ்நாட்டில் 50,000 பள்ளி மாணவர்கள் பிளஸ்டூ தேர்வு எழுத வரவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இதுபோல அதிக அளவிலான மாணவர்கள் தேர்வு ,அதுவும் பொதுத் தேர்வை எழுத வராமல் ஆப்சென்ட் ஆனது இல்லை என்பதால்இது பேசு பொருளாகியுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர் செல்வம் என்பவர் வெளியிட்டுள்ள டிவீட் விளக்கம்:
50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதவில்லை.. உண்மை நிலவரம் . மாணவர்கள் முன்பெல்லாம் பள்ளிக்கு வரவில்லை என்றால் அவர்கள் வேலைக்கு சென்று விட்டாலோ அல்லது பெண்கள் திருமணம் ஆகி விட்டாலோ இனி வர மாட்டார்கள் என்று தெரிந்து விட்டால் வருகை பதிவேட்டில் பெயரை நீக்கிவிடுவார்கள்.
இப்போது EMIS இணையதளம் வந்த பிறகு மாணவர்கள் பள்ளிக்கு எத்தனைமாதங்கள் வரவில்லை என்றாலும் கூட அவர்கள் பெயரை நீக்கமுடியாது. கல்வித்துறை கண்காணித்து அந்தந்த பள்ளிகளுக்கு தகவல் தரும். இடைநின்ற மாணவர்களை வட்டார வள மைய உதவியுடன் தேடிக் கண்டுபிடித்து அறிவுரை வழங்கி பள்ளியில் சேர்க்க வேண்டும்.
11ம் வகுப்பிற்கே வராத மாணவர்கள் பெயர்கள்கூட 12ஆம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டு இடைநிற்றல் தடுக்கப்பட்டது. இதில் குறிப்பிட்ட சதவீத மாணவர்கள் தேர்வு பயத்தால் அல்லது கற்றல் இடைவெளி காரணமாக தேர்வு எழுதவில்லை.இதுதான் தேர்வு எழுதாத மாணவர்கள் அதிகமாக இருப்பதற்குகாரணம் என்பது அரசுப்பள்ளி ஆசிரியராக என் கருத்து.
இந்த மாணவர்களை கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால் முன்பே கற்றலை நிறுத்தி இருப்பார்கள். இந்த தேர்வு எழுதாத மாணவர்களை கண்டறிவது எளிது. மீண்டும் தேர்வெழுத வைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிரியர் செல்வம் கூறுவதைப் போல அரசு இதில் கவனம் செலுத்தி, தேர்வு எழுதாமல் போன மாணவ, மாணவியரைக் கண்டு மீண்டும் தேர்வெழுத வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}