டெல்லி: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் மோதலுக்கு மத்தியில், ஈரானில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றும் நோக்கில் இந்திய அரசின் "ஆபரேஷன் சிந்து" நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று வரை மொத்தம் 517 இந்தியர்கள் வெற்றிகரமாக தாயகம் திரும்பியுள்ளனர். இவர்களில் பலரும் மாணவ, மாணவியர் ஆவர். துர்க்மெனிஸ்தானின் அஷ்கபத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அண்மையில் மேலும் சில இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
வெளியுறவு அமைச்சகமும் (MEA) டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் இந்த முயற்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றன. தாயகம் திரும்பியவர்கள், இந்திய அரசு வழங்கிய உடனடி உதவிக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். ஈரானில், குறிப்பாக டெஹ்ரான் மற்றும் மஷாத் ஆகிய இடங்களில் நிலவரம் கவலைக்கிடமாக இருப்பதாக தாயகம் திரும்பிய இந்தியர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக, காஷ்மீரைச் சேர்ந்த 90 மாணவர்கள் உட்பட 110 இந்திய மாணவர்களின் முதல் குழு, வட ஈரானிலிருந்து முதலில் ஆர்மீனியாவுக்கு வெளியேற்றப்பட்டு, பின்னர் புதுடெல்லிக்கு சமீபத்தில் அழைத்து வரப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொடர்ந்து இந்தியர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியர்களை மீட்பதற்காக தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மட்டும் திறந்து விட்டுள்ளது ஈரான் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் கிட்டத்தட்ட 4000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் - ஈரான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருவதால் அங்கிருந்து இந்தியர்கள் பலரும் தாயகம் திரும்ப விரும்பியதால் தற்போது அவர்களை மத்திய அரசு மீட்டு அழைத்து வருகிறது.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}