28 வயது மருமகளை மணந்து.. மனைவியாக்கிய.. 70 வயது மாமனார்!

Jan 28, 2023,12:55 PM IST
கோரக்பூர், உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் 28 வயது மருமகளை, 70 வயது மாமனார் திருமணம்  செய்த சம்பவம் பரபரப்பாகியுள்ளது.



மகன் இறந்து விட்ட காரணத்தால், தனது மருமகளின் சம்மதத்துடன் அவரை மணந்துள்ளார் இந்த மாமனார்.

கோரக்பூரில் உள்ள சாப்பியா உமாரோ கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ். இவர் போலீஸ்காரராக  இருந்தவர்.  இவரது மனைவி 12 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 3வது மகனும் சமீபத்தில் மரணமடைந்தார்.

இவரது மருமகள்தான் பூஜா. கணவரை இழந்த இவருக்கு வாழ்க்கையும், பாதுகாப்பும் தர வேண்டும் என்று விரும்பிய கைலாஷ், மருமகளையே மணக்க முடிவு செய்தார். அவரது இந்த முடிவுக்கு பூஜாவும் சம்மதித்தார். இதையடுத்து யாருக்கும் சொல்லாமல், தனது மருமகளை கல்யாணம் செய்து கொண்டார் கைலாஷ். இதுதொடர்பான புகைப்படம் வெளியே வந்த பிறகுதான் அனைவருக்கும் இவர்களது திருமணம் குறித்துத் தெரிய வந்தது.

கைலாஷ் யாதவ் தனது மருமகளையே மணந்த சம்பவம் அந்தக் கிராமத்தில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. கைலாஷின் எண்ணம் சரியானதுதான்.. ஆனால் அவரே மணந்ததற்குப் பதில், வேறு யாராவது பொருத்தமான மணமகனைப் பார்த்து கல்யாணம் செய்திருக்க வேண்டும்.. அதுதான் சரியானதாக இருந்திருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, இந்தத் திருமணம் குறித்து பர்ஹலாகஞ்ச் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜே. என்.சுக்லா கூறுகையில், இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் எங்களது பார்வைக்கும் வந்தது. இதுகுறித்து விசாரித்து வருகிறோம். ஆனால் பெண்ணின் சம்மதத்துடன் திருமணம் நடந்ததாக அறிகிறோம். எனவே எங்களுக்கு புகார் ஏதும் வரவில்லை என்று கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்