ஹைதராபாத்: ஹைதராபாத்தில் புஷ்பா படம் திரையிடப்பட்ட தியேட்டரில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் தரப்படுவதால் அவனது உடல் நிலை குறித்த கவலை அதிகரித்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதி புஷ்பா படம் திரையிடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் எப்போதுமே நடிகர் அல்லு அர்ஜூன் தனது படங்கள் திரைக்கு வரும்போது ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்ப்பது வழக்கம். ஆனால் புஷ்பா 2 படம் திரையிடப்பட்டபோது அவரது வருகை முதலில் அறிவிக்கப்படாமல் இருந்துள்ளது. காரணம், பெரும் கூட்டம் கூடியிருந்ததால். பின்னர் தனது குடும்பத்துடன் அல்லு அர்ஜூன் படம் பார்த்துள்ளார்.
அல்லு அர்ஜூனைப் பார்த்ததும் கூட்டம் முண்டியடித்தது. அவருடன் புகைப்படம் எடுக்க, செல்பி எடுக்க என கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தில் பலர் நெரிசலில் சிக்கிக் கொண்டனர். அதில் ரேவதி என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது 8 மகன் தேஜ் என்பவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக மருத்துமனைக்குக் கொண்டு சென்றனர்.

தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் தேஜின் உடல் நிலையில் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தற்போது உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சிறுவனுக்கு தற்போது வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
ஹைதராபாத்தின் கிம்ஸ் மருத்துவமனையில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை தரப்பட்டு வருகிறது. சிறுவனின் மூச்சுக் குழாயில் செயற்கையாக ஒரு பைப்பை பொருத்தி சுவாசத்தை எளிமையாக்கும் திட்டம் டாக்டர்களிடம் உள்ளது. அதைச் செய்தால் வென்டிலேட்டர் இல்லாமல் சுவாசிக்க முடியுமாம். சிறுவனின் மற்ற உடல் உறுப்புகள் நார்மலாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடை.யே ஹைதராபாத் மாநகர காவல்துறை ஆணையர் சி.வி. ஆனந்த் சிறுவனை நேரில் சந்தித்து அவனது உடல் நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறுகையில், சிறுவன் தேஜ் இயற்கையாக சுவாசிக்கவில்லை. மீண்டு வருவதற்கு நிறை காலம் எடுக்கும் என்றார்.
சந்தியா தியேட்டர் விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர், காவலர் மற்றும் நடிகர் அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதில் அல்லு அர்ஜூனும் கைது செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அல்லு அர்ஜூன் கைதுக்குப் பிறகு புஷ்பா 2 படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன், சசிகலா நால்வர் கூட்டணியால் யாருக்கு பலம்.. யாருக்கு பலவீனம்?
கோவையில் கடத்தப்பட்ட இளம் பெண்ணை மீட்க என்ன நடவடிக்கை?... டாக்டர் அன்புமணி ராமதாஸ்!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 4 மாவட்டங்களுக்கும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் காலதாமதமா? ஆளுநர் மாளிகை விளக்கம்
கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேட்டி!
பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியதற்கு திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டாமா?:எடப்பாடி பழனிச்சாமி
யாரும் செய்யாத பித்தலாட்டம்..திருச்சியில் கூட தங்காமல் விஜய் சென்னைக்கு ஓடி விட்டார்: வைகோ ஆவேசம்!
ஜனநாயகத்தை பாதுகாக்க திமுகவினர் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளனர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மோடியுடன் பேச்சுவார்த்தை சிறப்பாக உள்ளது.. இந்தியா வரப் போகிறேன்.. அதிபர் டிரம்ப் தகவல்
{{comments.comment}}