ஹனோய்: வியட்நாமைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் கடந்த 60 வருடங்களாக தூங்காமல் இருக்கிறாராம்.
தூக்கம் கண்களைத் தழுவட்டுமே என்று பாடலே உள்ளது . தூக்கத்தை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா.. அதிலும் மத்தியான நேரத்தில் சாப்பிட்டு முடித்த பின் வரும் பாருங்க ஒரு தூக்கம்.. அடடா அடடா.. அதை விட எதடா சொர்க்கம் என்று கண்கள் சொக்கி சொருகி ஒரு மார்க்கமாக இருக்கும் அந்த தூக்கம்.
ஆனால் வியட்நாமில் ஒரு தாத்தா 60 வருடமாக தூங்காமல் இருக்கிறார் என்ற தகவல் நம்மைத் தூக்கி வாரிப் போட வைக்கிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் வரை மனிதர்கள் தூங்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால் இந்த தாத்தா 60 வருடமாக தூங்காமல் இருக்கிறார் என்பது மலைப்பாக மட்டுமல்ல.. அதிர்ச்சியாகவும் இருக்கிறது.
அந்த அதிசயத் தாத்தாவின் பெயர் தாய் என்காக். 80 வயதாகிறது. இவர் கடந்த 1962ம் ஆண்டுதான் கடைசியாக தூங்கினாராம். அதற்குப் பிறகு இவருக்கு தூக்கமே வரவில்லையாம். இதுதொடர்பாக ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அந்த வருடம் ஒரு காய்ச்சல் வந்ததாம். அது வந்து போன பிறகு தூக்கம் போய் விட்டதாம். என்னென்னவோ செய்து பார்த்திருக்கிறார். அப்படியும் தூக்கம் வரவில்லையாம். இப்படி நாட்கணக்கில், மாதக் கணக்கில் அவர் தூங்காமல் இருந்ததைப் பார்த்த ஊர்க்காரர்கள், அவரை அதிசய மனிதர் என்று பெயரிட்டு அழைக்க ஆரம்பித்துள்ளனர். இப்படியே 60 வருடம் ஓடிப்போய் விட்டதாம்.
என்னதான் எல்லோரும் அதிசய மனிதர் என்று சொன்னாலும், தாய்க்கு மனதுக்குள் பெரும் ஏக்கம் உள்ளது. எல்லோரையும் போல நாமும் நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதே அந்த ஏக்கமாகும். ஆனால் அவரால் தூங்க முடியவில்லையாம். தாய் தூங்கி, அவரது குடும்பத்தினர் பார்த்ததே இல்லையாம்.
ஒரு நாள், 2 நாள் தூங்காமல் இருந்தாலே, உடல் ரீதியாக,மன ரீதியாக அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறது அறிவியல். ஆனால் தாய் இத்தனை வருடமாக தூங்காமல் இருந்தும் கூட அவருக்கு எந்தவிதமான உடலியல், மனவியல் பாதிப்பு ஏற்படவில்லையாம். உற்சாகமாக இருக்கிறார். நன்றாக சாப்பிடுகிறார். ஜாலியாக இருக்கிறார். மன உளைச்சல் கிடையாது. தினசரி க்ரீன் டீ சாப்பிடுகிறார். ஒயினும் குடிக்கிறார். ஆனாலும் மனதுக்குள் தூங்க முடியலையே என்ற ஏக்கமும் இருந்து கொண்டேதான் இருக்கிறதாம்.
இவர் குறித்து Drew Binsky என்ற யூடியூபர் பேட்டி கண்டு வீடியோ போட்டதும்தான் உலகத்துக்கே இவர் குறித்த தகவல்கள் தெரிய வந்து பலரும் வியந்தனர். இவருக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று யாராலும் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
Brain Health: இந்த 3 உணவுகள் சாப்பிட்டால் மூளை பாதிப்பு ஏற்படும்...எச்சரிக்கும் டாக்டர்கள்
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தொடர் உயர்வில் இருந்து மீண்ட தங்கம் விலை... சவரனுக்கு ரூ.80 குறைவு!
கல்விக் கண் திறந்த காமராஜரின் பிறந்த நாள்.. கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட்டம்
{{comments.comment}}