சென்னை: தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அது மட்டும் இன்றி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் காலங்களில் சூரியனின் வெப்பம் வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருக்கும். இதில் இருந்து தப்பிக்க மக்கள் பல்வேறு பாதுகாப்பு வழிகளை மேற்கொண்டு வருவார்கள். அப்படிப்பட்ட அக்னி நட்சத்திரம் கடந்த 4ம் தேதி தொடங்கி மே 28ம் தேதி முடிகிறது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் பெரும் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழையினால் வெப்பத்தில் இருந்த தப்பிக்க ஒரு வழி கிடைத்திருப்பதாக பொதுமக்கள் கருதி வருகின்றனர். குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நீலகிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதினால், சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சென்னையைப் பொருத்தவரை கடந்த 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடனும், ஆங்காங்கே மிதமான மழையும் பெய்து மக்கள் மனதை குளிர்வித்து வருகின்றது.
இந்த நிலையில், மழைக்குறித்தான முக்கிய அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், தமிழகம் முழுவதும் மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. அதாவது, 19.2செ.மீ மழை அதிகமாகும். மார்ச் 1 முதல் தற்போது வரை இயல்பாகப் பெய்ய வேண்டி மழையின் அளவு 10 செ.மீ ஆகும். ஆனால், இயல்பை விட 9.2 சதவீதம் மழை அதிகரித்துள்ளது.
அதேசமயம், சென்னையில் இயல்பை விட 83 சதவீதம் அதிக மழைப் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் இயல்பான மழையின் அளவு 6 செ.மீ ஆகும். ஆனால் 28 செ.மீ அதிகமாகப் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஜூலை 9ம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மையம்
ஏங்கே... கூமாபட்டியை விடுங்க.. குக்கரில் சமைத்த உணவை சாப்பிட்டால் இப்படி ஒரு ஆபத்து வருமா?
தலாய் லாமாவின் வாரிசை தீர்மானிக்க சீனாவுக்கு அதிகாரம் இல்லை.. இந்தியா பதிலடி
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு: சத்தீஸ்வரனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஸ்பெயினில் நடந்த கார் விபத்து.. போர்ச்சுகல் கால்பந்து வீரர் டியாகோ ஜோடா மரணம்.. ரசிகர்கள் சோகம்
ஒரு நாள் முதல்வர்.. அது படத்தில்... ஒரு நாள் பிரதமர் இது நிஜத்தில்.. தாய்லாந்தில் அசத்தல்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் 2025.. எல்லாம் கரெக்டாக இருந்தால்.. 3 முறை பாகிஸ்தானுடன் மோதலாம்!
எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: டாக்டர் ராமதாஸ்!
பிளாஸ்டிக் இல்லாத உலகம் அமைப்போம்.. இன்று International Plastic Bag Free Day!
{{comments.comment}}