கங்கர், சட்டீஸ்கர்: அடடா... எவ்வவளவு சந்தோஷம் பாருங்க இந்த தாத்தா முகத்தில்.. தனது வாழ்க்கையிலேயே முதல் முதலாக சட்டசபை தேர்தலில் வாக்களித்து தனது உரிமையை நிலை நாட்ட போகிறார் இந்த 9 3 வயது தாத்தா.
சட்டீஸ்கர் மாநிலம் பைன்ஸ்கன்ஹர் கிராமத்தை சேர்ந்தவர் ஷெர்சிங் ஹெட்கோ. இந்த 93 வயதுடைய தாத்தா நக்சலைட்டுகள் பாதிப்பு அதிகம் உள்ள கன்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இது பானு பிரதாப்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமம் .
இதுவரை இவர் தேர்தலில் வாக்களித்ததே கிடையாதாம். இந்நிலையில் தனது வாழ்க்கையிலேயே முதல் முறையாக வருகிற சட்டசபை தேர்தலில் வாக்களிக்க உள்ளாராம். 2024ம் ஆண்டு சட்டிஸ்கர் மாநில சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக தற்போது வாக்காளர்களின் பெயர்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது.
வீடு வீடாக போய் விடுபட்ட வாக்காளர்களின் பெயரை சேர்க்கும் பணி இடம்பெற்று வருகிறது. ஷெர்சிங் ஹெட்கோ கிராமத்திலும் வாக்காளர்களின் பெயர்கள் சரி பார்க்கும் பணி நடைபெற்றது. அப்போதுதான் இவரது பெயர் பட்டியலில் இடம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு முதன் முதலாக இணைக்கப்பட்டது.
தனக்கு ஓட்டு போடும் உரிமை கிடைத்திருப்பதே இந்த தாத்தாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம் . இத்தனை காலமாக இவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறமாலே இருந்து வந்தது. இந்த காரணத்தினால் தான் இவர் எந்த தேர்தலிலும் ஓட்டு போட்டதே இல்லையாம் .
தனது வாழ்க்கையிலேயே முதன் முறையாக ஓட்டு போடவிருப்பதால் பெரும் பரவசத்துடன் இருக்கிறாராம் தாத்தா. சூப்பர்ல!
முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!
வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா
Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?
கார்கில் வெற்றி தினம்.. தியாகிகளின் நினைவிடத்தில் குடும்பத்தினர், பொதுமக்கள் வீர அஞ்சலி
தாய்லாந்து-கம்போடியா எல்லை மோதல்.. கவனமாக இருக்குமாறு இந்தியர்களுக்கு அறிவுரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூலை 26, 2025... இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
{{comments.comment}}