அதிமுக ஒன்றும் உங்க தாத்தா வீட்டு சொத்து இல்ல... இபிஎஸ் மீது பாய்ந்த ஓபிஎஸ்

Feb 25, 2023,12:05 PM IST
சென்னை : அதிமுக ஒன்றும் எங்க தாத்தா வீட்டு சொத்தோ அல்லது எடப்பாடி பழனிச்சாமியின் தாத்தா வீட்டு சொத்தோ கிடையாது என ஓ.பன்னீர்செல்வம் காரசாரமாக பேட்டி அளித்துள்ளார்.



2022 ம் ஆண்டு சென்னையில் நடத்தப்பட்ட அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும். பொதுக் குழுவில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என சுப்ரீம் கோர்ட் பிப்ரவரி 23 ம் தேதியன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும், அதிமுக தொண்டர்களும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில், தனது ஆதரவாளர்களுடன், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு பற்றி ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நியாயத்திற்கான எனது தர்ம யுத்தத்தை தொடர போகிறேன். மக்களை சந்தித்து நீதி கேட்க போகிறேன். அதிமுக ஒன்றும் எங்கள் தாத்தாவோ, ஈபிஎஸ் தாத்தாவோ உருவாக்கியதோ கிடையாது. கட்சி சட்ட விதிகளின் படி இது எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. அதுவே இப்போதும் தொடர்கிறது.




ஜெயலலிதா மட்டும் தான் அதிமுக.,வின் நிரந்தர பொதுச் செயலாளர். அதை அம்பலப்படுத்த தொடர்ந்து போராடுவேன். அதிமுக ஒன்றும் யாருடைய தாத்தா வீட்டு சொத்தும் கிடையாது என்றார். 

அம்மா திமுக என்ற பெயரில் தனிக்கட்சி துவங்கப்போவதாக வெளியான தகவல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், முட்டாள்கள் சொல்வதற்கு எல்லாம் நான் பதிலளிக்க விரும்பவில்லை என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

பார் போற்றும் பாரதி!

news

ஓடி விளையாடு பாப்பா.. அதுவும் இந்த மாதிரி விளையாடு பாப்பா... உடம்புக்கு ரொம்ப நல்லது!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

news

கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்