"ராமர் மாதிரியே இல்லை.. கர்ணன் போல இருக்கிறார் பிரபாஸ்".. கஸ்தூரி கிண்டல்

Jun 08, 2023,09:58 AM IST
சென்னை: ஆதி புருஷ் படத்தில் நடிகர் பிரபாஸைப் பார்த்தால் ராமர் போலவே இல்லை. மாறாக கர்ணன் போல இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் பிரமாண்டப் படம்தான் ஆதி புருஷ். ராமர் கதை இது. இப்படத்தை முழுக்க முழுக்க கிராபிக்ஸ் உதவியுடன் எடுத்துள்ளனர். பாகுபலி ரேஞ்சுக்கு இது பெரிய ஹிட்டடிக்கும் என்றும் பேசி வருகிறார்கள்.



ஆனால் இப்படத்தில் ராமராக நடித்திருக்கும் பிரபாஸின் தோற்றப் பொலிவு குறித்து ஆரம்பத்திலிருந்தே விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ராமருக்கு உரிய எந்த லட்சணமும் பிரபாஸிடம் இல்லை. ராமரைக் கிண்டலடிப்பது போல உள்ளது என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ராமர் மீதான பக்தியைக் குறைக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறதா என்ற சர்ச்சையும் எழுந்தது.

அதேசமயம், பிரபாஸை உருவக் கேலி செய்யக் கூடாது என்று அவருக்கு ஆதரவான கருத்துக்களும் எழுந்தன. இந்தப் பின்னணியில், நடிகை கஸ்தூரி, பிரபாஸ் தோற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு  டிவீட் போட்டுள்ளார்.

அதில், ராமரும், லட்சுமணனும் மீசை, தாடியுடன் இருந்தார்கள் என்று ஏதாவது வரலாறு உள்ளதா.  ஏன் இப்படி ஒரு கோலம்.. அதுவும் பிரபாஸ் சார்ந்த தெலுங்கில் ராமர் வேடத்தில் எத்தனையோ ஜாம்பவான்கள் நடித்து ஒரு இமேஜை உருவாக்கி வைத்துள்ள நிலையில் அதைக் கெடுப்பது போல இது உள்ளது. எனக்கென்னமோ, ராமரைப் பார்த்தால் கர்ணன் போலவே இருக்கிறது என்று கூறியுள்ளார் கஸ்தூரி.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்