என்னது பாலத்தை காணோமா?... அதானி கிட்டயே ஆட்டய போட்டுட்டாங்கப்பா

Jul 08, 2023,12:50 PM IST

மும்பை : மும்பையில் அதானி குழுமத்தால் அமைக்கப்பட்ட 6000 கிலோ இரும்பு பாலத்தை திருடி சென்று விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 90 அடி நீளம் கொண்ட இந்த பாலம் மாலட் மேற்கு பகுதியில் இருந்து கடந்த மாதம் திருடப்பட்டது.

மும்பையின் நுல்லா பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலக்ட்ரிக் கேபிள் அமைப்பதற்காக அதானி குழுமத்தின் மின்வாரிய துறை சார்பில் பாலம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலையான பாலம் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதியில் ஏற்கனவே இருந்த பழைய இரும்பு பாலம் கிரேன் மூலம் அகற்றப்பட்டது. மாலட் பேக் ரோடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த பாலம் திடீரென மாயமானது. 



அந்த பகுதியில் கேமிரா ஏதும் இல்லாததால் யார் அதை திருடி சென்றார்கள் என தெரியவில்லை. ஜூன் 26 ம் தேதி அதானி எலக்ட்ரிசிட்டி சார்பில் எந்த இடத்தில் பாலம் வைக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டது. கடைசியாக ஜூன் 6 ம் தேதி அந்த பாலத்தை இப்பகுதியில் பார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டதட்ட ரூ.2 லட்சம் மதிப்புடைய இந்த இரும்பு பாகங்கள் அருகில் இருந்த கேமிராக்களை ஆராய்ந்ததில் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

நீளமான வாகனம் ஒன்று ஜூன் 11 ம் தேதி இப்பகுதியை கடந்து சென்றதும், அதற்கு பிறகு பாலம் மாயமானதும் தெரிய வந்தது. அந்த வாகனத்தில் பதிவு எண்ணை வைத்து போலீசார் தேடி வந்தனர். கேஸ் கட்டர் மிஷின்களை ஏற்றி வந்து, இரும்பு பாலத்தை சிறிய துண்டுகளாக மாற்றி எடுத்து செல்ல சிலர் முயன்றது தெரிய வந்தது. பாலத்தை திருடியதாக நான்கு பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை

news

ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?

news

தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

news

மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு

news

செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!

news

ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்

news

அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு

news

அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?

news

சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்