சென்னை : இந்திய சினிமாவின் மிக முக்கியமான டைரக்டர்களில் ஏ.ஆர்.முருகதாசும் ஒருவர். சோஷியல் மெசேஜ் உடனான கமர்ஷியல் படங்கள் எடுத்து, பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தவர். தமிழ் மட்டுமல்ல இந்தியிலும் ஏ.ஆர்.முருகதாஸ் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு.

தமிழில் தீனா, கஜினி, ரமணா, துப்பாக்கி என டாப் ஹீரோக்களை மாஸ் ஹீரோக்களாக காட்டி, பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்தை இயக்கினார். மும்பை போலீஸ் அதிகாரி ஒருவரின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படம்.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதுடன், படுதோல்வியும் அடைந்தது. இதனால் ஏ.ஆர்.முருகதாஸ் பல பிரச்சனைகளை சந்தித்தார். இதன் காரணமாக தர்பார் படத்திற்கு பிறகு அவர் படங்கள் ஏதும் இயக்கவில்லை. இந்த தோல்வியில் இருந்து மீண்டு, மறுபடியும் ஒரு கம்பேக் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவியது.
ஆனால் அந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. விஜய்யுடனான படம் பல காரணங்களால் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு பல படங்களை இயக்கும் முயற்சியில் ஏ.ஆர்.முருகதாஸ் ஈடுபட்டதாகவும், அவை எதுவும் சரியாக வராததால் டைரக்டஷனுக்கு பிரேக் கொடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
லேட்டஸ்ட் தகவலின் படி, நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்டஷனில் களமிறங்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தனது புதிய படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் இயக்க ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் இந்த படம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
அறிந்த பழமொழிகளும், அறியாத அர்த்தங்களும்.. கழுதைக்குத் தெரியுமா??
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
நன்றி சொல்லவே எனக்கு.. நன்றியுணர்வை வெளிப்படுத்துங்கள்.. மனசுக்கு நல்லது!
சப்தம் இல்லாமல் இருந்தால் கிடைப்பது.. அமைதி அல்ல!
World Rose Day: உலக ரோஸ் தினம் ஏன் இன்னிக்கு கொண்டாடுறோம் தெரியுமா?
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
Swarnalakshmi Writes: செப்டம்பர் 22.. இன்னிக்கு என்ன நாள் தெரியுமா..?
Inclusive Education in My Classroom: Every Child Matters
{{comments.comment}}