துணிவு படம் பார்க்க வந்து.. லாரி மீது ஏறி ஆடி விழுந்து.. அஜித் ரசிகர் மரணம்!

Jan 11, 2023,12:19 PM IST
சென்னை: டைரக்டர் ஹச்.வினோத், அஜித், தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகி உள்ள படம் துணிவு. அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். நேர் கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணியில் உருவான துணிவு படம் பொங்கல் ரிலீசாக இன்று(ஜனவரி 11) வெளியிடப்பட்டுள்ளது. 



நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாகி உள்ளதால் இருவரின் ரசிகர்களும் தங்கள் ஃபேவரைட் ஸ்டாரின் படத்தை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். இதில் துணிவு படத்தின் FDFS அதிகாலை 1 மணிக்கு வெளியிடப்பட்டது. இதை பார்ப்பதற்காக நேற்று மாலை முதலே தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் காத்துக் கிடந்தது.

இதில் சென்னை ரோகினி தியேட்டரில் துணிவு படம் பார்க்க வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த பரத்குமார் என்ற அஜித் ரசிகர், ஆர்வ மிகுதியால் லாரி மீது ஏறி நடனம் ஆடி உள்ளார். இதில் லாரியில் இருந்து தவறி விழுந்து சாலையில் தவறி விழுந்த அவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போக்குவரத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பரத்குமார், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படம் பார்க்க வந்த அஜித் ரசிகர், உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் இடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை

news

பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்

news

திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி

news

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்

news

ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை

news

Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!

news

ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி

news

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி

news

போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ

அதிகம் பார்க்கும் செய்திகள்