அடேய் யாருடா நீங்க?...விமர்சனம் வருவதற்கு முன் இணையத்தில் லீக்கான அஜித்தின் துணிவு

Jan 11, 2023,11:13 AM IST
டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் பொங்கலை முன்னிட்டு இன்று (ஜனவரி 11) அன்று தியேட்டர்களில் ரிலீசானது. இந்த படத்தின் FDFS அதிகாலை 3.30 மணிக்கு திரையிடப்பட்டது. படம் முடிந்து ரசிகர்களும், விமர்சகர்களும் தியேட்டரை விட்டு வெளியே வந்து படம் எப்படி இருக்கும் என விமர்சனம் சொல்வதற்கு முன்பாக துணிவு முழு படமும் இணையத்தில் லீக்காகி விட்டது.



வழக்கமாக ரஜினி, கமல், அஜித், விஜய் படங்கள் மட்டும் ரிலீசான அன்று, பிற்பகலுக்கு பிறகோ அல்லது மறுநாள் தான் இணையத்தில் வெளியாகி வந்தன. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அஜித்தின் துணிவு படம் FDFS முடிந்த சில மணி நேரங்களிலேயே முழு படமும் இணையத்தில் லீக்காகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

ஒரே நாளில் ரிலீசாகி இருப்பதால் அஜித்தின் துணிவு படம் பெஸ்டா, விஜய்யின் வாரிசு பெஸ்டா என அவர்களின் ரசிகர்கள் ஒரு புறம் போட்டி போட்டுக் கொண்டு கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அஜித்தின் துணிவு பைரசியில் லீக் ஆகி உள்ளதால், விஜய்யின் வாரிசு எப்போது வரும் என பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் விஜய், அஜித்தின் தீவிர ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்