செந்தில் பாலாஜியை தூக்குங்க.. தமிழக முதல்வருக்கு அண்ணாமலை கோரிக்கை

May 18, 2023,09:58 AM IST
சென்னை : தமிழக அமைச்சர் பதவியில் இருந்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்துக்கூறுகையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அப்போது தான் வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் வாங்கிய ஏமாற்றியதாக செந்தில் பாலாஜி மீது போடப்பட்ட வழக்கின் விசாரைண நேர்மையாக நடைபெறும். அவர் அமைச்சர் பதவியில் தொடர்ந்தால் மாநில போலீசார், விசாரணையை நேர்மையாக நடத்த முடியாது. 

முதலில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஊழல் வழக்கில் விசாரைண நேர்மையாக நடைபெறுவதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.



விசிக நிர்வாகியின் மிரட்டல்

இதே போல் சின்ன சேலம் தாசில்தார் இந்தியாவின் கை, கால்களை வெட்டுவதாக மீரட்டிய கள்ளக்குறிச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை கைது செய்ய வேண்டும் எனவும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தனபால், தாசில்தார் இந்திராவை மிரட்டிய வீடியோவையும் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாசுதேவனூர் பஸ் ஸ்டாப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி பெறாமல் கட்சி கொடி கம்பத்தை நட்டுள்ளனர். அந்த இடத்திற்கு வந்த தாசில்தார் இந்திரா, அதை அகற்றும் படி விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் கூறி உள்ளார். ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். 

"கை கால்களை வெட்டுவேன்"

அங்கிருந்த தனபால், போலீசார் முன்னிலையிலேயே இந்திராவின் கை, கால்களை வெட்டுவதாக மிரட்டி உள்ளார். இதையடுத்து இந்திரா இது பற்றி போலீஸ் புகார் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், வாசுதேவனூருக்கு வந்து, கட்சி கொடியை ஏற்றி வைத்து சென்றுள்ளார்.

ஆனால் தாசில்தார் இந்திரா அளித்த புகாரின் பேரில் அந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக போலீசார் அகற்றி உள்ளனர். தலைமறைவாக உள்ள தனபாலையும் போலீசார் தேடி வருகின்றனர். இது பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரிடம் கேட்டதற்கு, அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பற்றி தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

வெடிகுண்டு மிரட்டல்.. அதிகாலையிலேயே வந்த பரபரப்பு மெயில்.. உஷாரான போலீஸார்

news

கோவையில் இயற்கை வேளாண் மாநாடு.. பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை

news

TET தேர்வு.. சோசியல் சயின்ஸுக்கு மட்டும் ஏன் இந்த சலுகை.. முரண்களைக் களையுங்களேன்!

news

கொரியன்களுக்கு ஏன் தொப்பை இல்லை தெரியுமா.. கவிஞர் சொல்கிறார் கேளுங்கள்!

news

9 மாவட்டங்களுக்கு இன்று கனமழையும்.. நெல்லைக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் : வானிலை மையம் தகவல்!

news

திமுக ஆட்சியில் சென்னை ரவுடிகளின் சாம்ராஜ்யமாக மாறிவிட்டது: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!

news

சுகாதாரமற்ற குடிநீரை வழங்கி தமிழக மக்களைக் காவு வாங்கத் துடிக்கிறதா திமுக அரசு?: நயினார் நாகேந்திரன்

news

நெல் கொள்முதல் ஈரப்பத விகிதத்தை உயர்த்துக.. பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

news

காகிதக் குடுவைகளில் மது விற்கும் திட்டம்.. குழந்தைகளை கெடுக்க நினைத்த திமுக அரசு: அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்