யாரைப் பார்த்தாலும் நீட் தேர்வு ரத்தாகாது... திமுக.விற்கு அண்ணாமலை கொடுத்த பதில்

Mar 04, 2023,03:20 PM IST
கிருஷ்ணகிரி : திமுகவினர் யாரைப் போய்ப் பார்த்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு சார்பில் திமுக.,விற்கு பதிலளித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.



கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகில் நடந்த தகராறில் அடித்துக் கொல்லப்பட்ட ராணுவ வீரரின் குடும்பத்தை சந்தித்து, ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார் அண்ணாமலை. பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவ வீர் குடும்பத்திற்கு முதல்வர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணுவ வீரரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.5 கோடி நிதி வழங்க வேண்டும் என்றார்.



சமீபத்தில் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து ஓட்டு சேகரித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை ரத்து செய்வதே தனது முதல் நோக்கம் என்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடியை, தமிழக அசைச்சர் உதயநிதி நேரில் சந்தித்தார். 

பிரதமர் உடனான உதயநிதியின் சந்திப்பு பற்றிய கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தமிழகத்தை பொறுத்தவரை நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். இனி யார் யாரை சந்தித்தாலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படாது என திட்டவட்டாக திமுக.,விற்கு பதிலளித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மண்டல மகர விளக்குப் பூஜைக்காக. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடைதிறப்பு

news

பீகார் தேர்தல் முடிஞ்சாச்சு.. பாஜக.,வின் அடுத்த கவனம் எங்கு தெரியுமா.. இங்கு தான்!

news

சாதனை என்பது...!

news

12 வயதில் 2 புத்தகங்கள்.. குவியும் பாராட்டுகள்.. அசத்தும் எழுத்துலக இளவரசி ப்ரீத்தா!

news

பீகார் தேர்தல் அனைவருக்குமான பாடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

news

நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைமை கொடுத்த 'அசைன்மென்ட்' இது தானாமே!

news

புதிய காற்றழுத்த தாழ்வு.. நவம்பர் 17ம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு - வானிலை மையம்

news

10 ஆண்டுகளில் பாஜக.வின் அசுரத்தனமான வளர்ச்சி... யாருக்கெல்லாம் ஆபத்து?

news

அத்துணை அழகா புன்னகை.... ?

அதிகம் பார்க்கும் செய்திகள்