விநாயகரை எந்த நாளில், எப்படி வழிபட்டால் இரு மடங்கு பலன் கிடைக்கும் ?

Jan 10, 2023,03:03 PM IST
முழு முதற் கடவுளாக விளங்கக் கூடியவர் விநாயகப் பெருமான். எந்த காரியத்தை துவங்கினாலும் விநாயகர் வழிபட்ட பிறகே துவங்க வேண்டும் என்பார்கள். மிக எளிமையான தெய்வமாகவும் விளங்கக் கூடிய விநாயகப் பெருமானை வணங்கி விட்டு எந்த காரியம் செய்தாலும் அது தடையில்லாமல் நிறைவேறும் என்பது அனைவரும் அறிந்ததே.




விநாயகர் வழிபாடு வெற்றியை தரக் கூடியது. 'வி' என்றால் விசேஷமான, 'நாயகர்' என்றால் தலைமையானவர் என்று பொருள். விநாயகர் என்றால் விசேஷமான தலைமை பண்பு கொண்டவர் என்பது பொருள். 'வி' என்றால் இல்லை என்று ஒரு பொருளும் உண்டு. தனக்கு மேல் நாயகர் இல்லாதவர் விநாயகர். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெற விநாயகர் வழிபாடு அவசியமான ஒன்று.

விநாயகப் பெருமானை தினம் தினம் வழிபடுவது சிறப்பானது. அது தவிர விநாயகரை வழிபட சிறப்பான நாட்கள் என்றால் வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி. தேய்பிறை சதுர்த்தி, விநாயகரை வழிபட உகந்த நாள். வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அனைத்தும் விலக சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து நாயகரை வழிபடலாம். விநாயகரின் அருளை பெற ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் பாடலை பாராயணம் செய்ய வேண்டும். விநாயகர் அகவல் படித்து, விநாயகரை வழிபட்டால் என்ன நினைத்து விநாயகரை வழிபடுகிறோம் அந்த வேண்டுதல் அப்படியே நடக்கும்.

வெள்ளிக்கிழமையில் விநாயகர் அகவல் படித்து, விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் அவரிடம் என்ன வேண்டுதல் வைக்கிறோம் அதனை இரு மடங்கு பலனுடன் நிறைவேற்றி வைப்பார் விநாயகர். குழந்தை போன்ற குணம் கொண்டவர் விநாயகர் என்பவதனால் அவரை பெரிதாக படையல் போட்டும் வழிபடலாம். எளிமையாக வெறும் சர்க்கரை, அவல், பொறி மட்டும் வைத்தும் வழிபடலாம்.

ஓம் ஹ்ரீம் கணேசாய நம என்ற மந்திரத்தை சொல்லி விநாயகரை வழிபடலாம். இது தவிர விநாயகர் அஷ்டோத்திரம், விநாயகர் நாமாவளி ஆகியவற்றை சொல்லியும் விநாயகரை வழிபடலாம். 

விநாயகர் மூல மந்திரம் :

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லெளம் கம் கணபதயே
வரவரத ஸ்ர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா

கணேச காயத்ரி மந்திரம் : 

ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்