வீட்டு வாடகை, பெட்ரோல் காசு எல்லாம் நண்பர்கள் தருகிறார்கள்...அண்ணாமலை பரபரப்பு பேட்டி

Apr 14, 2023,09:45 AM IST

சென்னை : வீட்டு வாடகை, பெட்ரோலுக்கு பணம் எல்லாமே நண்பர்கள் தான் தருகிறார்கள். நான் ஆதாரம் இல்லாமல் எதையும் சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்துள்ள பரபரப்பு பேட்டி செம டிரெண்டாகி உள்ளது.

திமுக.,வின் ஊழல் மற்றும் சொத்து விபரங்களை ஏப்ரல் 14 ம் தேதி காலை 10.15 மணிக்கு வெளியிட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, தான் வாங்கியதாக திமுக.,வினர் குற்றம்சாட்டும் ரஃபேல் வாட்ச் பில்லை காட்டினார்.



பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவதூறுகளை அள்ளி தெளிப்பதற்காக வரவில்லை. நான் செல்வதற்கு ஆதாரம் இருக்கும். காவல்துறையில் பணியில் இருந்த போது லஞ்சப் பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுக.,வினர் தகவல் பரப்பி வருகின்றனர். ரஃபேல் வாட்ச் வரிசையில் 147 வது வாட்ச் தான் நான் வாங்கினேன். எனது வீட்டு வாடகையே நண்பர்கள் தான் தருகிறார்கள். ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் அனைத்தையும் நண்பர்கள் தான் தருகிறார்கள் என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தான் போலீஸ் வேலை பார்த்து கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணம் அனைத்தையும் அரக்குறிச்சி தேர்தலில் இழந்து விட்டதாக கூறி இருந்தார். தற்போதும் வீட்டு வாடகையை கூட நண்பர்கள் தான் தருவதாக கூறி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அதிமுக களத்தில் இல்லையா.. விஜய்க்கு எவ்வளவு தைரியம்... நாவை அடக்கி பேச வேண்டும்: செல்லூர் ராஜூ

news

பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

news

அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...புத்தாண்டில் காத்திருக்கும் அதிரடிகள்

news

2026ம் ஆண்டு என்ன நடக்கும்?...பாபா வாங்காவின் பகீர் கிளப்பும் கணிப்புகள்

news

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்

news

வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு

news

மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!

news

மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!

அதிகம் பார்க்கும் செய்திகள்