தமிழக பயணம் திடீர் ரத்து...ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த நிதிஷ்குமார்

Jun 20, 2023,12:43 PM IST
சென்னை : பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தனது தமிழக பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளார். அவருக்கு பதிலாக பீர் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தான் தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தையும், முத்துவேலர் நூலகத்தையும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று (ஜூன் 20) திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பீகார் முதல்வரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அரசு சார்பிலும் அழைத்திருந்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.



ஜூன் 23 ம் தேதி பாட்னாவில் பாஜக.,விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கு முன் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் சந்தித்து பேச இருந்தது மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதற்கு இந்த இருண்டு முதல்வர்களின் சந்திப்பு மிகப் பெரிய அடித்தளமாக அமையும் என கருதப்பட்டது. 

இந்நிலையில் நிதிஷ்குமார், திடீரென தனது தமிழக பயணத்தை ரத்து செய்துள்ளார். அவருக்கு பதில் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவே கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை காரணமாக நிதிஷ்குமார், தனது தமிழக பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் திடீரென தமிழக பயணத்தை ரத்து செய்தது ஸ்டாலினுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஜூன் 23 ம் தேதி பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டில்லி முதல்வர் அருவிந்த் கெஜ்ரிவால், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாவாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகளின் தலைவர் கலந்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்