சென்னையில் வெளுத்து வாங்கும் மழை...வேகமாக நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி

Jun 20, 2023,12:38 PM IST
சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த 2 நாட்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக மழை பெய்து வருவதுடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.

சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 அடியில் 20 அடியை நீர்மட்டம் நெருங்கி உள்ளது. 



மழை தொடர்ந்தால் செம்பரம்பாக்கம் ஏரி ஓரிரு நாட்களில் தனது முழு கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரம் கலெக்டர் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். ஐந்து கண் மதகு, 19 கண் மதகுகளின் உறுதித் தன்மை குறித்தும் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். உபரிநீர் செல்லும் வழித்தடங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

மழை தொடர்ந்து, ஏரியின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்தால் எந்த நேரத்திலும் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. மற்ற ஏரிகளின் நீர்மட்டமும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்