சென்னை: திமுகவுடன் கேப்டன் உருவாக்கிய தேமுதிக இணைந்ததை ஒருபோதும் கேப்டன் விஜயகாந்த் ஆன்மா மன்னிக்காது என்று தமிழக பாஜக விமர்சனம் செய்துள்ளது.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நேற்று வரை கூட்டணி குறித்து எந்த முடிவும் கூறாமல் இருந்து வந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த். செய்தியாளர்கள் சந்திப்பில் கூட கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்று மட்டுமே தெரிவித்து வந்தார். இந்நிலையில், இன்று திடீர் என திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைத்து கொண்டார் பிரேமலதா விஜயகாந்த். இதுவே திமுகவுடன் தேமுதிக இணையும் முதல் கூட்டணியாகும். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள முடிவை விமர்சித்து, தமிழக பாரதிய ஜனதா கட்சி இன்று அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த தலைவர் விஜயகாந்தின் கொள்கைகளுக்கு மாறாக தேமுதிக செயல்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், 'தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் விஜயகாந்த். அதனால், விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது' என்ற பதிவை வெளியிட்டுள்ளது.
திமுக மற்றும் தேமுதிக இடையிலான இந்தக் கூட்டணி, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜகவின் இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}