கல்யாண அழைப்பிதழில் "தல".. கலகலக்க வைத்த தோனி ரசிகர்!

Jun 05, 2023,04:16 PM IST
ராய்ப்பூர்: சட்டிஸ்கரைச் சேர்ந்த தோனி ரசிகர் ஒருவர், அவரது படத்தையும், தோனியின் ஜெர்சி நம்பர் ஏழையும் போட்டு தனது கல்யாண அழைப்பிதழை உருவாக்கியுள்ளார். இந்த அழைப்பிதழை தோனிக்கும் கூட அவர் அனுப்பி வைத்து அசத்தியுள்ளார்.

உலக அளவில் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு இந்த அளவுக்கு பக்தி கலந்த பரவசமான, வெறித்தனமான ரசிகர் கூட்டம் இருக்கிறது என்றால் இந்த நிமிடத்தில் அதில் தோனிதான் "கிங்". கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் மீது பயங்கர கிரேஸாக இருக்கிறார்கள். அவரை மோட்டிவேஷனாக நினைக்கிறார்கள். அவரைப் பின்பற்றத் துடிக்கிறார்கள்.



உண்மையில் தோனி மாதிரியான ஒரு "லீடரை" இன்று நிச்சயம் பார்க்க முடியாது. செய்வதிலும், சொல்வதிலும் ஒரு தெளிவு, நிதானம்.. அதேசமயம் துணிவும் கலந்த துல்லியம் என்று அட்டகாசமான தலைவராக வலம் வந்தவர் தோனி. இன்று வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தியும் வருகிறார்.

இப்படிப்பட்ட தோனிக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு ரசிகர், சட்டிஸ்கரையே மூக்கில் விரலை வைக்க வைத்துள்ளார். அந்த ரசிகருக்கு கல்யாணம் நடக்கப் போகிறது. இதற்காக அவர் அடித்துள்ள அழைப்பிதழ் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

கல்யாண அழைப்பிதழின் அட்டையில் தோனியின் ஜெர்சி எண் 7 மற்றும் அவரது புகைப்படத்தையும் அந்த ரசிகர் போட்டுள்ளார். கூடவே தோனியின் செல்லப் பெயரான "தல" என்ற வார்த்தையையும் இணைத்துள்ளார்.  இந்த அழைப்பிதழை தோனிக்கும் கூட அவர் அனுப்பி வைத்துள்ளாராம்.

இப்படிப்பட்ட ரசிகர்களை மனதில் வைத்துக் கொண்டுதான், தான் ஓய்வு பெறுவது குறித்து இப்போதைக்கு யோசிக்கவில்லை. அப்படிப்பட்ட முடிவை எடுப்பது எளிதானது.. ஆனால் நான் போகுமிடமெல்லாம் என்னைப் பின் தொடரும் ரசிகர்களைப் பார்த்த பிறகு அது கடினமானது.. ரசிகர்களுக்கு கிப்ட் தர ஆசைப்படுகிறேன் என்று சமீபத்தில் கூறியிருந்தார் தோனி என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்