காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து நடந்தபோது.. என்ன சொன்னோம் தெரியுமா?.. ராகுல் காந்தி

Jun 05, 2023,12:38 PM IST
நியூயார்க்: காங்கிரஸ் ஆட்சியில் ரயில் விபத்து  நடந்தபோது நாங்கள் பிரிட்டிஷ் அரசு மீது குற்றம் சாட்டவில்லை. மாறாக நாங்களே பொறுப்பேற்று ராஜினாமா செய்தார் ரயில்வே அமைச்சர் என்று கூறியுள்ளார் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நியூயார்க்கில் நடந்த இந்தியர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது ஒடிஷா ரயில் விபத்து குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.



ராகுல் காந்தி பேசுகையில்,  காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது ஒரு ரயில் விபத்து நடந்தது. அப்போது நாங்கள், பிரிட்டிஷ் அரசுதான் இதற்குக் காரணம் என்று  கூறவில்லை. மாறாக அப்போதைய ரயில்வே அமைச்சர், இதற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்று கூறி ராஜினமா  செய்தார்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது.. நாம் பல்வேறு காரணங்களைக் கூறுகிறோம்.. பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறோம், ஏற்க மறுக்கிறோம். இதுதான் நமது பிரச்சினை என்றார் ராகுல் காந்தி.

ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி, ரயில்வே அமைச்சகம் கவச் திட்டத்தை செயல்படுத்ததாதே விபத்துக்குக் காரணம். ரயில்களில் விபத்து தடுப்பு கருவிகளை நான் ரயில்வே அமைச்சராக இருந்தபோது அமல்படுத்தினேன். அதை ரயில்வே தற்போது பயன்படுத்துவதில்லை. அதுவே விபத்துக்குக் காரணம் என்று அமைச்சர் அஸ்வனி முன்பாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

இருப்பினும்  இந்த சமயத்தில் அரசியல் செய்யக் கூடாது என்று இந்தக் கோரிக்கைகளை பாஜகவும், மத்தியஅரசும் நிராகரித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்