டெல்லி: ஒடிஷாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்று ரயில்வே சந்தேகப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவும், விபத்து நடந்ததற்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிமினல் வேலையில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். இந்த நிலையில்தான் தற்போது ரயில்வே வாரியம், சிபிஐ விசாரணை கோரியுள்ளது.
இந்த ரயில் விபத்துக்கு சதி வேலையே காரணமாக இருக்கும் என்றும் ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. ரயில்கள் வருவதை கண்டறிய உதவும் "எலக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் சிஸ்டம்" ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால்தான் விபத்து நேரிட்டதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.
இதற்கிடையே, விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 288 அல்ல என்றும் 275தான் என்றும் ஒடிஷா அரசு தெரிவித்துள்ளது. இதில் 187 உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன. இவர்களை உறவினர்களிடம் கொடுப்பதற்காக பாதுகாப்பாக அரசு வைத்துள்ளது. 110 உடல்கள் புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைத்துள்ளனர். மற்ற உடல்கள் அம்ரி மருத்துவமனை, கேபிடல், சம் ஹாஸ்பிட்டல் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் வைத்துள்ளனர்.
2 ரயில் பாதைகள் சீரமைப்பு
விபத்து நடந்த பகுதியில் ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்ணவ் தொடர்ந்து முகாமிட்டுள்ளார். சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. தற்போது 2 பாதைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒன்று கிழக்கு மற்றம் தென் இந்தியாவை இணைக்கும் மெயின் டிரங்க் லைன் ஆகும்.
மின்சார கேபிள்களை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. அது சரியாகும் வரை இந்தப் பகுதியில் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார கேபிள்களை சரி செய்ய 3 நாட்களாகலாம்.
விபத்து காரணமாக இப்பாதையில் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 125 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 56 ரயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. 10 ரயில்களின் பாதை சுருக்கப்பட்டுள்ளன. 14 ரயில்கள் நேரம் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.
இந்த ரயில் விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இடம் பெயர் தொழிலாளர்கள்தான். வேலைக்காக சென்னை, பெங்களூர் கிளம்பி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலானவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்தவர்களும் கூட. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்களது குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}