டில்லி மெட்ரோவில் தொடரும் அக்கப்போர்... கிஸ் அடித்து அதிர வைத்த ஜோடி!

May 11, 2023,02:48 PM IST
டில்லி : டில்லி மெட்ரோ ரயிலில் இளம் ஜோடி ஒன்று முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனமும், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

நாட்டில் மும்பை, சென்னை உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தாலும்,  டில்லி மெட்ரோ ரயில் தான் பிரபலமாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் தொடர்ந்து அங்கு நடக்கும் அக்கப்போர்கள் தான். கடந்த சில மாதங்களாகவே டில்லி மெட்ரோ ரயிலில் நடக்கும் அலப்பறைகள் வீடியோக்களாக வெளி வந்து சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகிறது. இது பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது.



டில்லி மெட்ரோவில் இளம் ஜோடிகள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள், இளம் பெண் ஒருவர் டூ பீசில் வந்த வீடியோ, இளைஞர்கள் ஸ்கர்ட் அணிந்து வந்த வீடியோ என அடுத்தடுத்து பல வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி சோஷியல் மீடியாவை அதிர வைத்து வந்தன. டில்லி மெட்ரோ வீடியோக்கள் அனைத்தும் செம வைரலாகி வருவது வழக்கம்.

அது போல் இளம் ஜோடி ஒன்று மெட்ரோ ரயிலில் கிஸ் அடித்துக் கொள்ளும் வீடியோ ஒன்ற தற்போது வெளியாகி உள்ளது. மெட்ரோ ரயில் கோச்சில் இளைஞர் ஒருவர் தரையில் அமர்ந்திருக்க. அவரது மடியில் இளம் பெண் ஒருவர் படுத்திருக்கிறார். இவர்கள் இருவரும் லிப்லாக் கிஸ் அடித்துக் கொண்ட வீடியோ தான் தற்போது வெளியாகி உள்ளது. இது தொடர்பாக டில்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு புகார்கள் குவிந்து வருகிறது.

இதனையடுத்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது இடங்களில் இது போல் ஆபாசமாக நடந்து கொள்ள வேண்டாம் என வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டுள்ளது. இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்கள் அருகில் இருக்கும் மெட்ரோ நிலைய ஊழியர்கள் அல்லது பாதுகாவலரிடம் இது பற்றி தகவல் தெரிவித்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்