எஸ்.எம்.கிருஷ்ணா, மனைவி காலில் டி.கே.சிவக்குமார் விழுந்தது ஏன்?

May 22, 2023,04:34 PM IST

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வராகியுள்ள டி.கே.சிவக்குமார், முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், தற்போது பாஜகவில் இருப்பவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவையும், அவரது மனைவியையும் சந்தித்து காலில் விழுந்து தொட்டு வணங்கிக் கும்பிட்டார்.

நேற்று பப்புவா நியூகினியாவுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர  மோடியின் காலில் அந்த நாட்டு பிரதமர் ஜேம்ஸ் மராபே விழுந்து வணங்கியது  பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெங்களூரில் ஒரு சம்பவம் இதேபோல நடந்துள்ளது. ஆனால் இதில் ஒரு குடும்ப பந்தம் இணைந்துள்ளது.



கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா. முன்பு காங்கிரஸில் இருந்தவர். இவரது காலத்தில்தான் பெங்களூரு நகரம் ஐடி தலைநகரமாக மாறியது. ஐடி நிறுவனங்களின் பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் இவர்தான் முக்கியக் காரணம். தற்போது எஸ்.எம்.கிருஷ்ணா பாஜகவில் இருக்கிறார்.

இந்த நிலையில் துணை முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்தார். அவரிடம் பூச்செண்டு கொடுத்த அவர் அப்படியே காலில் விழுந்து மூன்று முறை அவரது காலைத் தொட்டுக் கும்பிட்டார். அதேபோல அருகில் நின்றிருந்த கிருஷ்ணாவின் மனைவி காலிலும் மூன்று முறை தொட்டுக் கும்பிட்டார்.

எஸ்.எம்.கிருஷ்ணா மீது டி.கே.சிவக்குமாருக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் உண்டு. ஒரே சமூகத்தவர்கள், ஒரே மைசூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல.. இருவரும் சம்பந்திகளும் கூட. அதாவது டி.கே.சிவக்குமாரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவைத்தான், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகள் மாளவிகா கிருஷ்ணாவின் மகன் அமார்த்யா ஹெக்டேவுக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

மாளவிகாவின் கணவர்தான் வி.ஜி. சித்தார்தா. இவர்தான் கபே காபி டேவின் நிறுவனர் ஆவார். சில ஆண்டுகளுக்கு முன்பு வி.ஜி. சித்தார்தா ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது நினைவிருக்கலாம். 

அமார்த்யா ஹெக்டே - ஐஸ்வர்யா திருமணம் 2020ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் வைத்து மிகவும் எளிய முறையில் நடந்தது. அப்போது கொரோனோ பரவல் அதிகம் இருந்ததால் மிகவும் சிம்பிளாக இந்தத் திருமணம் நடைபெற்றது.

ஐஸ்வர்யாவைப் போலவே அமார்த்யாவும் தனது பெற்றோருக்கு மூத்த பிள்ளை ஆவார். தனது தந்தை மறைவுக்குப் பின்னர் அவரது பிசினஸை அமார்த்யாதான் கவனித்து வருகிறார். அதேபோல தனது தந்தை உருவாக்கிய குளோபல் அகாடமி டெக்னாலஜி பொறியியல் கல்லூரி நிர்வாகத்தை ஐஸ்வர்யா கவனித்து வருகிறார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்